கோவை காரமடை அருகே 14 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய கூலித்தொழிலாளி போக்சோ சட்டத்தின் கீழ் கைது!

கோவை: கோவை காரமடை அருகே 14 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய கூலித்தொழிலாளி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

கோவை: கோவை காரமடை அருகே 14 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய கூலித்தொழிலாளி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

கோவை மாவட்டம் காரமடை பெள்ளத்தி எம்.ஜி.ஆர் நகர் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி சிவலிங்கம் (26). அதே பகுதியில் வசித்து வரும் 14 வயது சிறுமி எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில், கொரோனா தொற்று காரணமாக சிறுமி பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். அப்போது, சிறுமியை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாக சிவலிங்கம் ஆசை வார்த்தை கூறிய நிலையில், பாலியல் உறவின் காரணமாக சிறுமி கர்ப்பம் அடைந்துள்ளார்.

இதனை தொடர்ந்து, சிறுமியை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவ பரிசோதனை மேற்கொண்ட போது, சிறுமி மூன்று மாதம் கர்ப்பமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.



பின்னர் இது குறித்து கிடைத்த தகவலின் அடிப்படையில் சைல்ட் லைன் அமைப்பு நிர்வாகி ஏஞ்சலின் அளித்த புகாரின் பேரில், சிவலிங்கத்தை கைது செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

சிவலிங்கத்திற்கு சிறுமியுடன் வருகின்ற 21ம் தேதி திருமணம் நடைபெற இருந்த நிலையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...