கோவை: கோவை மாநகராட்சிக்குட்பட்ட பள்ளியில் மாணவர் சேர்க்கை விண்ணப்பத்தில் இந்தியை திணிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது :-
புதிய கல்வி கொள்கையில் கட்டாயம் இந்தியை திணிக்கும் முயற்சியில் மத்திய அரசு தொடர்ந்து ஈடுபட்டு கொண்டிருக்கிறது. தமிழக மக்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பைக்கண்டு மாநில அரசு இரு மொழிக்கொள்கைதான் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தும் என தெளிவுபடுத்தியுள்ளது.
இந்நிலையில், கோவை மாநகராட்சி தமிழக அரசிற்கு விரோதமாக மாணவர் சேர்க்கை விண்ணப்பத்தில் இந்தியை திணிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது வண்மையான கண்டனத்திற்குரியது.
கோவை மாநகராட்சிக்குட்பட்ட பள்ளியில் ஒன்றாம் வகுப்பு குழந்தைகளை சேர்க்க கொடுக்கப்படும் விண்ணப்பப் படிவங்களில் 14வது கேள்வியாக இந்தி மொழி படிக்க விரும்புகிறீர்களா அல்லது கைத்தொழில் பாடம் எடுக்க விரும்புகிறீர்களா என்கிற கேள்வி கேட்கப்பட்டுள்ளது.
ஒன்றாம் வகுப்பு மாணவர் சேர்க்கையிலேயே இந்தி படிக்க விரும்புகிறீர்களா என்ற கேள்வி கேட்கப்பட்டுள்ளது. மாநகராட்சி தன்னிச்சையாக இந்த கேள்வியை வடிவமைத்ததா அல்லது மாநில கல்வித்துறை இந்த விண்ணப்பத்தை முன்மொழிந்துள்ளதா என்கிற ஐயம் எழுகிறது.
மாநில அரசு அறிவிப்பு மக்களின் எதிர்ப்பை கண்டு ஒருபுறம் இரு மொழிக்கொள்கை என அறிவிப்பு வெளியிட்டு விட்டு மறைமுகமாக மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொண்டு இந்தியை திணிக்க தொடங்கி விட்டதா என்கிற ஐயம் எழுகிறது.
மேலும், கைத்தொழில் பாடம் எடுக்க விரும்புகிறீர்களா என்ற கேள்வி மத்திய பாஜக அரசின் குலக்கல்வி முறையை புகுத்துகிற புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு நடைமுறைப்படுத்த தொடங்கி விட்டதா என்கிற கேள்வி எழுவதாகவும் உடனடியாக தமிழக அரசும் கோவை மாநகராட்சியும் இதனை தெளிவு படுத்த வேண்டும். இல்லையெனில் எதிர்வினையாற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மக்களை திரட்டி மாநகராட்சி அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.