கோவை: கோவையில் நீட் தேர்வு பயத்தினால், 19 வயது மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை, ஆர்எஸ் புரம் வெங்கடசாமி சாலை கிழக்கு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் ரவிச்சந்திரன். ஐடிஐயில் பணியாற்றும் அரசு ஊழியரான இவரது, 19 மகள் சுபஸ்ரீ.
நாமக்கல் மாவட்டத்தில் சிபிஎஸ்சி பாடப்பிரிவில் 12 ம் வகுப்பு முடித்த சுபஸ்ரீ, கடந்த இரண்டு வருடமாக நீட் தேர்வுக்காக தயாராகி வந்துள்ளார். கடந்தாண்டு நடைபெற்ற நீட் தேர்வில் 451 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.
பல் மருத்துவ படிப்பில் இடம் கிடைத்தும், பொது மருத்துவ பிரிவில் சேர வேண்டும் என்பதற்காக, கோவையில் உள்ள தனியார் அகாடமியில் நீட் பயிற்சி பெற்று வந்துள்ளார். இந்த நிலையில், கொரோனா ஊரடங்கினால் ஒத்தி வைக்கப்பட்ட நீட் தேர்வு, வரும் செப்டம்பர் மாதம் நடைபெறும் என அறிவிப்பு வெளியானது.
இதனால், மாணவி மன உளைச்சலுக்கு உள்ளானதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து நீட் தேர்வு அச்சத்தில் தற்கொலைக்கும் முடிவு செய்த அவர், நேற்று மாலை அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து சுபஸ்ரீயின் தாயார் சுமதி அளித்த புகாரின் பேரில் ஆர்.எஸ் புரம் காவல் துறையினர் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்விற்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மாணவி தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் திமுக கோவை மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக், எம்எல்ஏ மற்றும் கோவை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் சிஆர்.இராமச்சந்திரன் ஆகியோர் மாணவியின் பெற்றோரை சந்தித்து ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தனர்.
இது தொடர்பாக பேட்டி அளித்த நா.கார்த்திக் எம்எல்ஏ, கூறுகையில், மாணவியின் தற்கொலை தொடர்பாக கேள்விபட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அவர் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி வர சொன்னதாக தெரிவித்தவர்.
நீட் தேர்வால் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வருவதாகவும், இதனால், உடனடியாக மத்திய மாநில அரசுகள் நீட் தேர்வை இரத்து செய்ய வேண்டும் என கூறினார்.
கோவை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் சிஆர்.இராமச்சந்திரன் கூறுகையில், நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனவும் மக்களை பற்றி கவலைப்படாத இந்த அரசின் ஆட்சியை தூக்கி எறியும் காலம் வெகு தொலைவில் இல்லை, என்று கூறினார்.