கோவை: நாடு முழுவதும் வரும் 22 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட உள்ளது. தற்போது, கொரோனா ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்வதற்கும், விசர்ஜன ஊர்வலம் நடத்துவதற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது.

இந்நிலையில், பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில், சார் ஆட்சியர் வைத்தியநாதன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி குறித்து சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பொள்ளாச்சி, ஆனைமலை கிணத்துக்கடவு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வட்டாட்சியர்கள் மற்றும் காவல்துறை துணை கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து, பொள்ளாச்சி சார் ஆட்சியர் கூறுகையில்., "வரும் 22ம் தேதி பொள்ளாச்சி வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பொது இடங்களில் விநாயகர் சிலை வைப்பதற்கும், விசர்ஜன ஊர்வலத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கோயில்கள் முன்பு சிலை வைத்தல், ஒலிபெருக்கி பயன்படுத்துதல் என எதற்கும் அனுமதி இல்லை. வீடுகளில், வழக்கம்போல விநாயகர் சதுர்த்தி வழிபாடு செய்யலாம், பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து சிலை வாங்க கடைக்கு செல்ல வேண்டும்."
இதனிடையே, விதிமீறல்களை கண்காணிக்க ஏழு பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் சிலை வைத்தால், வருவாய்துறை மற்றும் காவல்துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என்றார்.