கோவை ஆனைக்கட்டி அருகே பிறந்து நான்கே நாட்களான யானை குட்டி சடலமாக மீட்பு - வனத்துறையினர் விசாரணை!

கோவை: கோவை ஆனைக்கட்டி அருகே பிறந்து நான்கு நாட்களே ஆன யானை குட்டி சடலமாக மீட்கப்பட்டது குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை: கோவை ஆனைக்கட்டி அருகே பிறந்து நான்கு நாட்களே ஆன யானை குட்டி சடலமாக மீட்கப்பட்டது குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை மாவட்டத்தில் யானைகள் அதிகமாக நடமாடும் பகுதியில் ஆனைக்கட்டியும் ஒன்று. அடிக்கடி சாலைகளிலும், கிராமங்களில் வருவதுமாக இருக்கும். இதனால் அப்பகுதியில் வனத்துறை அதிகம் கவனம் செலுத்தி கண்காணித்து வருகின்றனர்.

குறிப்பாக, கோவை வனச்சரகத்திற்கு உட்பட்ட ஆனைக்கட்டி சென்ட்ரல் பகுதியில் இருந்து, அதாவது மாங்கரையில் இருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஆனைக்கட்டி எக்ஸ்டென்சன் காப்புக்காட்டில் வனப்பணியாளர்கள் ரோந்து செல்வது வழக்கம்.

இந்த நிலையில், இன்று வழக்கம் போல ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒரு யானை குட்டி இறந்த நிலையில் இருப்பதை கண்ட அவர்கள், உடனடியாக கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் மாவட்ட வன அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர்.



இதனை தொடர்ந்து, அவர்களின் ஆலோசனைப்படி கால்நடை மருத்துவர்களான மருத்துவர் சுகுமார் மற்றும் மருத்துவர் மனோகரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து ஆய்வு செய்தனர்.

பின்னர், இது தொடர்பாக அவர்கள் தெரிவிக்கையில், யானை குட்டி இறந்த நிலையில் பிறந்திருக்கலாம் எனவும் இந்த சம்பவம் நடந்து இரண்டு அல்லது மூன்று நாட்கள் ஆகியிருக்கலாம் என்றனர். மேலும், காட்டுப் பன்றிகள் அதன் உடலை சாப்பிட்டு இருக்கிறது எனவும் இது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்தனர்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...