விநாயகர் சிலை ஊர்வலங்களுக்கு தமிழக அரசு அனுமதி அளிக்கக்கூடாது - தபெதிக பொதுச் செயலாளர் வலியுறுத்தல்

கோவை: தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவிவரும் நிலையில், விநாயகர் சிலை ஊர்வலங்களுக்கு தமிழக அரசு அனுமதிக்கக்கூடாது என்று தபெதிக பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

கோவை: தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவிவரும் நிலையில், விநாயகர் சிலை ஊர்வலங்களுக்கு தமிழக அரசு அனுமதிக்கக்கூடாது என்று தபெதிக பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது :-

தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு தினந்தோறும் சுமார் 6000 பேர் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், விநாயகர் சிலை ஊர்வலங்கள் தேவையா என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

நூறாண்டுகளுக்கு முன் இந்தியாவில் கொடூரமான பிளேக் நோய் தாக்கப்பட்டு ஆயிரக்கணக்கான மக்கள் மடிந்த போது அந்த நோய்க்கு காரணமான எலிகளை கொள்ள வேண்டும் என்று அன்றைய பிரிட்டிஷ் அரசாங்கம் உத்தரவிட்டபோது எலி பிள்ளையார் வாகனம் அதை அழிக்கக்கூடாது என்று பால கங்காதர திலகர் போர்க்கொடி தூக்கினார்.

பிளேக் நோயால் மக்கள் அழிந்தாலும் பரவாயில்லை எலிகளை கொள்ளக்கூடாது என்று மதத்தைக் காட்டி திலகர் கையாண்ட அதே நிலையைத்தான் இன்று பாரதிய ஜனதா கட்சி, இந்து முன்னணி அமைப்புகள் கையாளுகின்றன.

கொரோனா நோயால் மக்கள் அழிந்தாலும் பரவாயில்லை தங்களின் மதவாத அரசியலுக்கு விநாயகர் ஊர்வலங்களை நடத்துவோம் என்று அறிவிக்கின்றனர்.

இந்த மிரட்டல்களுக்கு அஞ்சாமல் தமிழக அரசு பிறப்பித்த விநாயகர் ஊர்வலங்களுக்கு தடை, பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைக்கக்கூடாது என்ற உத்தரவில் உறுதியாக இருக்க வேண்டும் என்று தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் கேட்டுக்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...