கோவை குறிச்சி குளத்திலிருந்து சூரியன் அஸ்தமிக்கும் காட்சியினை கண்டுகளிக்க சிறப்பு பார்வையாளர் மாடம் அமைக்கப்படவுள்ளது

கோவை: விநாயகர் சிலைகளை வைத்து வழிபட அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி கோவை காந்திபுரத்தில் சிலையுடன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட நபரால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை: கோவை மாநகராட்சி சார்பாக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.52.16 கோடி மதிப்பீட்டில் குறிச்சி குளம் சீரமைக்கும் பணிகள் விரைவில் துவங்கப்படும், என மாநகராட்சி அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

கோவை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் குளங்கள் சீரமைத்தல், 24 மணி நேரமும் குடிநீர் வழங்குதல், பாதாளசாக்கடை திட்டம், சூரியதகடுகள் மூலம் மின்சக்தி உற்பத்தி, தெரு விளக்குகளை எல்.இ.டி விளக்குகளாக மாற்றுதல், மல்டிலெவல் வாகனங்கள் நிறுத்தும் இடம், மாதிரி சாலைகள் அமைக்கும் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ரூ.998 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின், கீழ் குறிச்சி குளத்தை சீரமைக்க ரூ.52.16 கோடி மதிப்பீட்டில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.



குறிச்சி குளம் 334.92 ஏக்கர் பரப்பளவு கொண்ட கோவையின் மிக முக்கியமான குளம் ஆகும். குளத்தின் கொள்ளளவு 50 மில்லியன் கன அடி ஆகும். இக்குளத்தின், மொத்த நீர்பிடிப்புப் பகுதி 12.30 சதுர கி.மீ கொண்டதாகும்.

இக்குளத்தில், மேற்கொள்ளப்படும் திட்டங்கள் குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:

குறிச்சி குளத்தில் 5.50 கி.மீ நீளத்திற்கு மிதிவண்டி பாதை, 5.50 கி.மீ நீளத்திற்கு நடைபாதை, குளக்கரையில் நான்கு இடங்களில் அலங்கார வளைவுகள், குளக்கரையின் ஓரத்தில் 47 சிற்றுண்டிகள் மற்றும் பல வகையான சிறு அங்காடிகள், மூன்று இடங்களில் குழந்தைகளுக்கான சிந்தடிக் விளையாட்டு திடல், கோவை - பொள்ளாச்சி சாலையின் மேற்புறத்தில் தேசிய கொடிகள் அமைத்தல், இரண்டு இடங்களில் பசுமை சமுதாய கூடம், 4 இடங்களில் சூரிய ஒளி மின்சார தகடுகள், 36 இடங்களில் காற்றாலைக் கோபுரங்கள், குளத்தினை அழகை கண்டுகளிக்க 23 இடங்களில் பார்வையாளர் மாடங்கள், மாலை நேரத்தில் சூரிய அஸ்தமனக் காட்சியினை கண்டுகளிக்க ஏதுவாக சிறப்பு பார்வையாளர் மாடம், குளத்தின் உள்ளே இரண்டு இடங்களில் சூரிய ஒளி செயற்கை வழி நீருற்று, 2 கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்படவுள்ளது.

இதற்கான பணிகள் விரைவில் துவங்க உள்ளது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...