கோவையில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட அனுமதிக்கக் கோரி சிலையுடன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட நபரால் பரபரப்பு!

கோவை: விநாயகர் சிலைகளை வைத்து வழிபட அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி கோவை காந்திபுரத்தில் சிலையுடன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட நபரால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை: விநாயகர் சிலைகளை வைத்து வழிபட அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி கோவை காந்திபுரத்தில் சிலையுடன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட நபரால் பரபரப்பு ஏற்பட்டது.

கொரோனா தொற்று காரணமாக பொது நிகழ்ச்சிகள் நடத்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வரும் 22ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டங்களுக்கு தமிழக அரசு தடை விதித்து உள்ளது.

இந்நிலையில், தமிழக அரசு பரிசீலனை செய்து அனுமதி அளிக்க வேண்டும் எனவும் இல்லையெனில் இந்து அமைப்புகள் தடையை மீறி பொது இடங்களில் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தப்படும் என இந்து அமைப்புகள் தெரிவித்து உள்ளன. இது தொடர்பாக நேற்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த நிலையில், இன்று காலை பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட அனுமதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சக்தி சேனா அமைப்பைச் சேர்ந்த சம்பத் என்பவர் விநாயகர் சிலையுடன் வந்திருந்து காந்திபுரம் பேருந்து நிலையம் முன்பு உள்ள சித்தி விநாயகர் கோவில் முன்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும், தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட அனுமதி அளிக்க வேண்டும், மேலும் உரிய வழிமுறைகளுடன் அனைத்து இடங்களிலும் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்ய தமிழக அரசு அறிக்கை வெளியிட வேண்டும் என கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பத்தை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று வேனில் ஏற்றினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...