கோவை: கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் உறுப்பினர்கள் மீது முகநூல் மூலம் அவதூறு பரப்புபவர்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது காவல் துறையினரை கண்டித்தும், தமிழக அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். மேலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில அலுவலகமான பாலன் இல்லத்தை விபச்சார விடுதி என்று கூறியதை கண்டித்தும் மூத்த கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவர் நல்லகண்ணு அவர்களை தரக்குறைவாக பேசியும் மாற்று கட்சியை சேர்ந்தவர் என்றும் முகநூலில் பொய்யான செய்திகள் பரவி வருவதை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர்.
இந்த செய்தியானது "மார்க்சியம் வென்றே தீரும்" என்ற பக்கத்தில் பதிவு இடப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி கருப்புசாமி என்ற முகநூல் முகவரியில் சீதாராம் யெச்சூரி தலையில் சட்டியை வைத்தது போல் படத்தை பதிவிட்டுள்ளனர்.
மேலும், பல போலியான முகநூல் முகவரியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை குறித்தும் அதன் உறுப்பினர்கள் குறித்தும் ஆபாசமாகவும் செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.

எனவே, இது போன்ற போலியான முகநூல் முகவரியில் கம்யூனிஸ்ட் கட்சியினர் மீது அவதூறு பரப்பும் நபர்களை கண்டறிந்து குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டது.