3.15 லட்சம் முகக்கவசங்கள் மட்டுமே இருப்பில் உள்ளதால்; கோவையில் ரேசன் கடைகளில் முககவசங்கள் வழங்குவதில் தாமதம் ஏற்பட வாய்ப்பு

கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள ரேசன் கடைகளில் முககவசங்கள் வழங்குவதற்காக 62 லட்சம் முககவசங்கள் தேவை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், தற்போது 3.15 லட்சம் முகக்கவசங்கள் மட்டுமே இருப்பில் உள்ளதால் முககவசங்கள் வழங்குவதில், தாமதம் ஏற்பட்டுள்ளது.

கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள ரேசன் கடைகளில் முககவசங்கள் வழங்குவதற்காக 62 லட்சம் முககவசங்கள் தேவை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், தற்போது 3.15 லட்சம் முகக்கவசங்கள் மட்டுமே இருப்பில் உள்ளதால் முககவசங்கள் வழங்குவதில், தாமதம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் ரேசன் கார்டில் உள்ள குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு தலா 2 முகக்கவசம் வீதம் அனைவருக்கும் இலவச முககவசம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து இருந்தது.

அதன்படி, கோவை மாவட்டத்தில் உள்ள 1,442 ரேசன் கடைகள் மூலம், சுமார் 9 லட்சம் ரேசன்கார்டு தாரர்களுக்கு 62 லட்சம் முகக்கவசம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, முதற்கட்டமாக 6 லட்சம் முகக்கவசங்கள் கோவை வந்தடைந்தன. இதில், 2.85 லட்சம் முகக்கவசம் போதிய தரமில்லை என்று கூறி திருப்பி சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து, மாவட்ட நிர்வாக அதிகாரிகள் கூறுகையில், "குறைந்தது, 44 லட்சம் முககவசங்கள் வந்தால் தான் ரேசன் கடைகளில் முககவசங்கள் வழங்குவதில் சிக்கல் ஏற்படாது. தற்போது, கோவை வந்த 6 லட்சம் முககவசங்களில் 2.85 லட்சம் முககவசங்கள் தரமற்றவை என அதிகாரிகள் திருப்பி அனுப்பியுள்ளனர்," என்றார்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...