பாதாள சாக்கடை பணியால், பொள்ளாச்சியில், போக்குவரத்து நெரிசல்; வாகன ஓட்டிகள் அவதி

பாதாள சாக்கடை பணியால், பொள்ளாச்சியில்,  போக்குவரத்து நெரிசல்; வாகன ஓட்டிகள் அவதி.








கோவை: பொள்ளாச்சியில் நடைப்பெற்று வரும் பாதாள சாக்கடை பணியால், குறுகிய பாதைகளில் கனரக வாகனங்கள் திருப்பி விடப்படுவதால், போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

பொள்ளாச்சியில், கடந்த நான்குஆண்டுகளுக்கும், மேலாக பாதாள சாக்கடை பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. இதனால், நகரில் உள்ள முக்கிய சாலைகளான, மார்க்கெட் ரோடு, வெங்கட்ரமணன் வீதி, புதிய திட்ட சாலை, கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் கனரக வாகனங்கள் அதிகம் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 

இதனால், பல்வேறு மாவட்டங்களில் இருந்து கேரளா உள்ளிட்ட பகுதிகளுக்கு அத்தியாவசிய பொருட்களை ஏற்றி வரும் கனரக வாகனங்கள், நகரின் குறுகிய பாதைகளில் திருப்பி விடப்படுகின்றன. 



மேலும், நேதாஜி ரோடு, ராஜா மில் ரோடு, மார்க்கெட் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் வரும் லாரிகள் மின்கம்பிகளை உரசும் அளவுக்கு அதிக பாரம் ஏற்றி வந்து, சிக்கிக் கொள்வதால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். 

எனவே, கனரக வாகனங்களை குறுகலான பாதையில் வருவதற்கு போக்குவரத்து காவல்துறையினர் அனுமதிக்கக்கூடாது, என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

வால்பாறையில் தொடர் மழை: பள்ளி மாணவர்கள், எஸ்டேட் தொழிலாளர்கள் கடும் அவதி

வால்பாறை மற்றும் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் இரவு முழுவதும் பெய்த கனமழை இன்று காலையிலும் நீடித்ததால், பள்ளி மாணவர்கள...

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...