கல்யாண் ஜுவல்லரியில் பணிபுரியும் 51 பேருக்கு கொரோனா தொற்று; நிர்வாகம் மீது இரு பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு

கோவை கல்யாண்  ஜுவல்லரியில் பணிபுரியும் 51 பேருக்கு கொரோனா தோற்று; நிர்வாகம் மீது இரு பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு.








கோவை: கோவை 100 அடி சாலையில் செயல்பட்டு வரும் கல்யாண் ஜூவல்லரி நகைக்கடையைச் சேர்ந்த விற்பனையாளர் ஒருவருக்கு கடந்த சனிக்கிழமை கொரோனா தொற்று ஏற்பட்டதால், கிருமி நாசினிதெளிக்கப்பட்டு கடை மூடப்பட்டது. 

இந்நிலையில், அங்குபணியாற்றி வந்த 90 ஊழியர்களுக்கும்கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், 51 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து, அவர்கள் கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனை, அரசு மருத்துவமனை, கொடிசியா வளாகம், கற்பகம் மருத்துவமனை ஆகிய இடங்களில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

ஓரே கடையில்,51 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளதால், கடந்த ஒரு வாரத்திற்குள் நகைக் கடைக்குச் சென்று வந்தவர்கள்,தாமாக முன்வந்து, அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளும்படி சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும், அஜாக்கிரதையாக செயல்பட்டு, பல பேருக்கு கொரொனா தொற்று ஏற்பட காரணமாக இருந்த கல்யாண் ஜுவல்லரி நிர்வாகம் மீது சுகாதார துறையினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இந்தப் புகாரின், அடிப்படையில் இரு பிரிவுகளின் கீழ் கல்யாண் ஜூவல்லரி நிர்வாகம் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...