கோவை: நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு கோவையில் அதிகரித்து வரும் நிலையில், நோய் தொற்றால் பாதிக்கபட்ட நபர்கள் உயிரிழப்பது மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக, தமிழகம் முழுவதும் கொரோனா நோய் தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் சுகாரதாரத்துறையை சேர்ந்த பணியாளர்கள், மாநகராட்சி தூய்மை பணியாளர்கள், காவல் துறையினர், மருத்துவர்கள், செவிலியர்கள், ஆம்புலன்ஸ் இயக்குபவர்கள் என பலதரப்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், கோவையில் கொரோனா நோய் தடுப்பு களத்தில் பணிபுரிந்து வந்த குமார் (56) என்ற சுகாதாரத்துறை ஆய்வாளர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு, கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
தொடர்ந்து, அவரது உடல்நிலை மோசமடைந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவருக்கு, மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
அவர் மரணம், சக பணியாளர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.