கோவை: கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன், பாதுகாப்பான முறையில் 74வது சுதந்திர தின விழா எளிமையான முறையில் கோவையில் இன்று, கொண்டாடப்பட்டது.
கோவை: கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன், பாதுகாப்பான முறையில் 74வது சுதந்திர தின விழா எளிமையான முறையில் கோவையில் இன்று, கொண்டாடப்பட்டது.

கொரோனா தொற்று காரணமாக இந்திய திருநாட்டின் 74வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு, வ.ஊ.சி மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த அனைவரது அலைபேசி எண்கள் பெறப்பட்டு உடல் வெப்பநிலை சோதனை செய்யபட்டு கிருமி நாசினி கொண்டு கைகள் சுத்தம் செய்யபட்ட, பின்னரே நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதிக்கபட்டனர்.

மேலும், நிகழ்வில் பங்கேற்க வந்த அனைவருக்கும் கபசுர குடிநீரும், முககவசங்களும் வழங்கபட்டு, வழக்கமான காவல்துறை சோதனைகளுக்கு பின்னர் நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதிக்கபட்டனர்.

இதன், பின்னர் வ.ஊ.சி மைதானத்தில் தேசிய கொடியை மாவட்ட ஆட்சித்தலைவர் கு.ராசாமணி 8.52 மணியளவில் கொடியை ஏற்றி வைத்து காவல்துறை மரியாதையை ஏற்று கொண்டார்.

அப்போது வண்ன பலூன்கள் வானில் பறக்கவிடப்பட்டது. காவல்துறை மரியாதையை ஏற்று கொண்ட மாவட்ட ஆட்சியர் வாகனத்தின் இடையே கண்ணாடி தடுப்பு ஏற்படுத்தபடுத்தபட்டு இருந்தது.
ஆயுதபடை ஆய்வாளர், சரவணன் தலைமையில் நடைபெற்ற அணிவகுப்பு மரியாதையில் வெறும் 67 காவலர்கள் மட்டுமே கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

இதன் பின்னர், கொரோனா தொற்று காலத்தில் சிறப்பாக பணியாற்றிய 13 துறைகளை சேர்ந்த 90 பேருக்கு விருதுகள் வழங்கபட்டன.

இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 6 பேர், அரசு மருத்துமனையில் 7 பேர், இணை இயக்குனர் சுகாதார துறையில் 10 பேர், துணை இயக்குனரகத்தில் 5 பேர், மாநகர காவலர்கள் 10 பேர், மாவட்ட காவலர்கள் 5 பேர், மாநகராட்சியில் 8 பேர், நகராட்சி 6 பேர், பேரூராட்சியில் 6 பேர், ஊரக வளர்ச்சி முகமை 5, போக்குவரத்து துறையில் ஒருவர், உணவு பாதுகாப்பு துறை ஒருவர் வருவாய் துறை 20 பேர் என 90 பேர் கவுரவிக்கபட்டனர்.

இவர்களுக்கு, சான்றிதழ்கள் மற்றும் நினைவு பரிசுகள் வழங்கபட்டன.
இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரை முருகன், மேற்கு மண்டல தலைவர் பெரியைய்யா, மாநகர காவல் ஆணையர் சுமித் சரண், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசு, சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் ஸ்டாலின், குற்றபிரிவு துணை ஆணையர் உமா, தலைமையிட துணை ஆணையர் குணசேகரன், போக்குவரத்து துணை ஆணையர் முத்தரசு உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கொரோனா தொற்று காரணமாக வழக்கமாக நடைபெறும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறவில்லை. மேலும், பார்வையாளர்கள் மற்றும் பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.