கோவை: இயற்கை எழில் கொஞ்சும் பொள்ளாச்சி நகராட்சி, 36 வார்டுகளை கொண்டது. நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து வார்டுகளிலும், சிறுவர் பூங்காக்கள் மற்றும் முதியவர்கள் நடைபயிற்சி பாதைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

இதில், தேர்நிலை கந்தசாமி பூங்கா, ஜோதிநகர் சிறுவர் பூங்கா, மஹாலிங்கபுரம் பூங்கா போன்ற பூங்காக்கள் மக்களால் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. மேலும் பொதுமக்கள், நடைப்பயிற்சி, உடற்பயிற்சி செய்யவும், சிறுவர்கள் பொழுதை கழிக்க சிறந்த பொழுதுபோக்கு இடமாகவும் விளங்குகிறது, இப்பூங்காக்கள்.

தற்போது, கொரோனா ஊரடங்கால் அனைத்து பூங்காக்களும் மூடப்பட்டுள்ளதால், மக்கள் அவர்களைபயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. பூங்காக்கள் பயன்பாட்டில் இல்லாததால், பராமரிப்பின்றி புதர்மண்டி கிடக்கின்றது.

இதனால், விஷ ஜந்துக்கள் குடியிருப்பு பகுதிகளுக்குள் குடியேறும் அபாயம் உள்ளது எனவும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு அரசு இந்த பூங்காக்களை சீரமைத்து பராமரிக்க வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக உள்ளது.