கோவை: வால்பாறையில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியூ சார்பில் டான் டீக்கு எதிராக போராட்டம் அறிவித்த நிலையில், வட்டாட்சியர் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.
கோவை: வால்பாறையில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியூ சார்பில் டான் டீக்கு எதிராக போராட்டம் அறிவித்த நிலையில், வட்டாட்சியர் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.
கோவை மாவட்டம் வால்பாறையில் தமிழ்நாடு அரசு தேயிலை தோட்ட கழகத்திற்கு சொந்தமான தேயிலைத் தோட்டங்கள் சின்கோனாவில் உள்ளது. இங்கு சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள்.
இதனிடையே, டேண்டீ தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு ஏப்ரல் 1ம் தேதி முதல் மே 3ம் தேதி வரை சம்பளம் மற்றும் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் அறிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து, இன்று வால்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் சிஐடியூ கோரிக்கையை பேச்சுவார்த்தையில் தீர்வு காண வால்பாறை வட்டாட்சியர் ராஜன் தலைமையில் முத்தரப்பு சமரச கூட்டம் நடைபெற்றது.
இதில் சம்பளம் நிலுவையாக ரூ 12.50 பைசா மற்றும் சிக் லீவ் சம்பள லீவ் போன்றவற்றை நிர்வாகம் கணக்கீடு செய்து உடனடியாக வழங்கப்பட வேண்டும், குடை கம் பூட் கடந்த 2011 வரை வழங்க வேண்டும், ஒரு தொழிலாளி ஒரு நாள் பணிக்கு வரவில்லை என்றால் ஏழு நாட்கள் சம்பளம் பிடித்தம் செய்வதாக நிர்வாகம் மிரட்டுவதை தவிர்க்க வேண்டும், தொழிலாளியின் வருங்கால வைப்பு நிதி தொகையை உடனடியாக லாசன் கோட்டத்தில் முறையாக இணைக்க வேண்டும் உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கையை வைத்து பேச்சுவார்த்தை நடைபெற்றது.

பேச்சுவார்த்தையின் இறுதியில் விரைவில் சுமூக முடிவு எடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

இந்த பேச்சுவார்த்தையில் வால்பாறை வட்டாட்சியர் ராஜன், காவல் ஆய்வாளர் மகேஸ்வரி, டான் டீ பொதுமேலாளர் விக்ரம், தொழிற்சங்க தலைவர் கே.ராஜ் தொழிற்சங்க துணைப் பொதுச்செயலாளர் செல்லத்துரை செல்வகணபதி, தில்லை ரத்தினம், விஜயேந்திரன், டேண்டீ குரூப் கமிட்டி மாரிமுத்து மற்றும் தொழிற்சங்க உறுப்பினர்கள் முன்னிலையில் கலந்து கொண்டனர்.