மூணாறு நிலச்சரிவில் உயிரிழந்த ராஜமலை எஸ்டேட் தொழிலாளர்களுக்கு வால்பாறையில் கண்ணீர் அஞ்சலி!

கோவை: மூணாறு நிலச்சரிவில் உயிரிழந்த ராஜமலை எஸ்டேட் தொழிலாளர்களின் திருவுருவ படங்களுக்கு வால்பாறையில் மாலை அணிவித்து மலர் தூவி கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

கோவை: மூணாறு நிலச்சரிவில் உயிரிழந்த ராஜமலை எஸ்டேட் தொழிலாளர்களின் திருவுருவப் படங்களுக்கு வால்பாறையில் மாலை அணிவித்து மலர் தூவி கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

கேரளாவில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை தொடர்ந்து வரும் நிலையில், கடந்த வாரம் நள்ளிரவில் கேரளா மாநிலம் மூணாறு அருகே பெட்டி முடிப் பகுதியில் உள்ள எஸ்டேட்டில் தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பில் நிலச்சரிவு ஏற்பட்டது.

இந்த நிலச்சரிவில் 80 பேர் சிக்கிய நிலையில், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்துள்ளது. உயிருடன் மீட்கப்பட்டவர்களுக்கு மூணாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.



இந்த நிலையில், கோவை வால்பாறையில் உள்ள டாக்ஸி, வேன், டெம்போ, ஆட்டோ உள்ளிட்ட அனைத்து ஓட்டுநர்கள் சங்கத்தின் சார்பாக மூணாறு பகுதியிலுள்ள ராஜமலை எஸ்டேட் பகுதியில் கனமழையால் மண்சரிவு ஏற்பட்டு அதில் உயிரிழந்த தோட்டத் தொழிலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

வால்பாறை நகரக்கூட்டுறவு வங்கியின் தலைவர் வால்பாறை வீ.அமீது தலைமையில் வால்பாறை காந்தி சிலை பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள தொழிலாளர்களின் திருவுருவப் படங்களுக்கு மாலை அணிவித்து மலர் தூவி கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அனைத்து தரப்பு மக்களும் கலந்து கொண்டனர்.

Newsletter

வால்பாறையில் தொடர் மழை: பள்ளி மாணவர்கள், எஸ்டேட் தொழிலாளர்கள் கடும் அவதி

வால்பாறை மற்றும் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் இரவு முழுவதும் பெய்த கனமழை இன்று காலையிலும் நீடித்ததால், பள்ளி மாணவர்கள...

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...