டாப்சிலிப்பில் சர்வதேச யானைகள் தினம் கொண்டாட்டம்: வளர்ப்பு யானைகளுக்கு சிறப்பு பூஜை செய்து வழிபாடு

கோவை: காடுகளை பாதுகாப்பதில் யானைகளுக்கு ஒரு முக்கியப் பங்கு உண்டு. யானைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆண்டு தோறும் ஆகஸ்ட் 12-ஆம் தேதி சர்வதேச யானைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

கோவை: காடுகளை பாதுகாப்பதில் யானைகளுக்கு ஒரு முக்கியப் பங்கு உண்டு. யானைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆண்டு தோறும் ஆகஸ்ட் 12-ஆம் தேதி சர்வதேச யானைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்தநிலையில், இன்று ஆனைமலை புலிகள் காப்பகம் சார்பில், சர்வதேச யானைகள் தினம், பொள்ளாச்சி மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள டாப்ஸ்லிப் கோழிகமுத்தி யானைகள் முகாமில் கொண்டாடப்பட்டது.



இந்த முகாமில் வளர்க்கப்படும் சின்னத்தம்பி உள்ளிட்ட 28 வளர்ப்பு யானைகளை அங்குள்ள ஆற்றில் குளிக்க வைத்து, முகாமில் உள்ள கோவிலில் சிறப்பு பூஜை செய்யபட்டு வழிபாடு நடைபெற்றது.



இதைத் தொடர்ந்து வளர்ப்பு யானைகளுக்கு சத்தான உணவு வழங்கப்பட்டது. பின்பு, டாப்சிலிப்பில் நடைபெற்ற யானைகள் தின விழாவில் யானைகள் குறித்த கையேடுகளும், யானை பாகனுக்கு யானைகளை பாதுகாப்பது குறித்தும் வனத்துறை அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

கொரோனா தொற்று காரணமாக சுற்றுலா தலங்களுக்கு, சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஆண்டு சுற்றுலாப் பயணிகள் இல்லாமல் டாப்சிலிப்பில் யானைகள் முகாமில் வனத்துறையினர் மற்றும் யானை பாகன்கள் மட்டுமே கலந்து கொண்டு யானைகள் தினத்தை எளிமையாக கொண்டாடினர்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...