வெள்ள நீரில் தத்தளிக்கும் காந்தவயல் கிராமம்..!

கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அனை பருவமழை காரணமாக நிரம்பியதால், அதில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு தண்ணீரானது பவானி அற்றின் வழியே பவானிசாகர் அணையை அடைந்து வருகிறது.








கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அனை பருவமழை காரணமாக நிரம்பியதால், அதில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு தண்ணீரானது பவானி அற்றின் வழியே பவானிசாகர் அணையை அடைந்து வருகிறது.

தொடர், உபரி நீர் திறந்து விடபட்டு வருவதால், பவானி அணையின் நீர் மட்டமும் 95 அடிக்கும் மேல் உயர்ந்து உள்ளது. இதனால், பவானி ஆற்றை சுற்றியுள்ள தாழ்வான பகுதிகள் மற்றும் கிராமங்களில் வெள்ள நீர் புகுந்துள்ளது.

குறிப்பாக, ஒவ்வொரு ஆண்டும் பாதிக்கப்படும் கந்தவயல் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை பிற பகுதிகளுடன் இணைக்கும் உயர்மட்ட பாலம் முழுவதும் வெள்ள நீரில் மூழ்கியுள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே பவானி ஆற்று வெள்ளத்தால், காந்தவயல், ஆலூர், உளியூர் கிராமத்தை நகரத்துடன் இணைக்கும் லிங்காபுரம் - காந்தவயல் உயர் மட்ட பாலம் தண்ணீரில் மூழ்கி போக்கு வரத்தானது முற்றிலும் துண்டிக்கபட்டுள்ளது.



30 அடி உயரம் கொண்ட இந்த உயர் பாலம் பவானி சாகர் அணை 95 எட்டியுள்ள நிலையில், தற்போது முழுவதுமாக தண்ணீரில் மூழ்கி பாலத்திற்கு மேல் சுமார் 5 அடிக்கு தண்ணீர் தேங்கியுள்ளது.



இப்பாலத்தினை, கடந்து சென்றே பிற பகுதிகளுக்கு செல்ல வேண்டியுள்ளதால், தங்கள் வாழ்வாதாரமே முடங்கியுள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர், அப்பகுதி கிராம மக்கள்.



மேலும், தேங்கியுள்ள நீரில் ஆபத்தான முறையில் எவ்வித பாதுகாப்பு வசதிகளும் இன்றி, அத்தியவசிய பொருட்களான பால், காய்கறிகள், சமையல் எரிவாயு போன்றவற்றை பரிசல் மூலமே எடுத்து செல்லப்படும் நிலமைக்கு தள்ளபட்டுள்ளனர், இந்த கிராம மக்கள்.

எனவே, உடனடியாக அவர்களின் பயன்பாட்டிற்கு படகு வசதியை மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்தி தர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...