கோவை ரேஸ்கோர்ஸ் மாதிரி சாலை பணிகள் டிசம்பர் மாதம் நிறைவடையும் என மாநகராட்சி அதிகாரிகள் தகவல்.

கோவை ரேஸ்கோர்ஸ் மாதிரி சாலை பணிகள் டிசம்பர் மாதம் நிறைவடையும் என மாநகராட்சி அதிகாரிகள் தகவல்.

கோவை: ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் ஒரு பகுதியாக ரூ.40.70 கோடியில் கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் மாதிரி சாலைப்பணிகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. வரும் டிசம்பர் மாதம் இப்பணிகள் நிறைவடையும், என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோவை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சுமார் ரூ.998 கோடி மதிப்பில் வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், அதிநவீன சாலைகள், பொழுதுபோக்கு பூங்காங்கள், சிறுவர் பூங்காக்கள், விளையாட்டுத்திடல், எல்.இ.டி தெருவிளக்குகள், குறிச்சி குளம், உக்கடம் பெரியகுளம், வாலாங்குளம், முத்தன்ணன் குளம் போன்ற மாநகர் பகுதியில் உள்ள 9 குளங்களை அழகுப்படுத்தல், மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன.

ஸ்மார்ட் சிட்டித் திட்டத்தின் ஒரு பகுதியாக ரேஸ்கோர்ஸ் சாலையை மாதிரி சாலையாக அமைக்க திட்டமிடப்பட்டு, மாநகராட்சி சார்பில் ரூ.40.70கோடி மதிப்பீட்டில்மாதிரி சாலை பணிகள் ஜுன் 12ம் தேதி உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி அதற்கான பணிகளை துவக்கி வைத்தார்.



இப்பணிகள் குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது :

ரேஸ்கோர்ஸ் மாதிரி சாலைதிட்டத்தில், அப்பகுதியில் உள்ள சாலைகள்,சீரான அகலமுள்ள சாலைகளாக குறிப்பிடத்தக்க வளைவுகளுடன் தரமாக வடிவமைக்கப்பட உள்ளது.

இச்சாலையில் உள்ள அனைத்து சந்திப்புகளும் மறு வடிவமைப்பு செய்யப்பட்டு அகலப்படுத்தப்பட உள்ளது. குறிப்பாக, அரசு கலைக்கல்லூரி அருகே, மக்களின் பொழுது போக்கிற்காக திறந்தவெளி அரங்கம் அமைக்கபடவுள்ளது. பாதசாரிகள்மற்றும் வாக்கிங் செல்வோருக்காக பாதை அமைக்கப்பட உள்ளது. 



அதில் குறிப்பிட்ட பகுதிகளில் 30க்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கப்படுகின்றன. இந்த கடைகள் சாலையின் வெளிப்புறம் 4.மீ அகலமுள்ளநடைபாதையில் அமைக்கப்படுகிறது. 

அதே போல், வாகனங்கள் நிறுத்தபிரத்யேக இடங்கள் அமைக்கப்படவுள்ளது. மக்கள் எளிதாக நடந்து செல்லும் வகையில் சாலையின் இருபுறங்களிலும் பாதை வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும், இரண்டு இடங்களில் திறந்த வெளியில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு என தனித்தனியாக உடற்பயிற்சிக் கூடங்கள், சிந்தட்டிக் தரையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 



குழந்தைகளின் பொழுது போக்கிற்காக சிந்தட்டிக் தரைதளத்துடன் கூடிய குழந்தைகள் பூங்காவிளையாட்டு உபகரணங்களுடன் அமைக்கப்பட உள்ளது. 

சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், கழிப்பறைகள் மற்றும் பாதுகாப்பு அறைகள், நிழற்குடைகள், இலவச தொலைத்தொடர்புகள்,பாதுகாப்பு வசதிக்காக பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள்,சாலையோரங்களில் சிற்றுண்டி கடைகள்,அமைக்கப்பட உள்ளது.



மேலும், மழை காலங்களில் மின்சாரம் தடைப்படாமல் கிடைக்க மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு வசதிகள் போன்றவைகள்நிலத்திற்கு அடியில் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

இப்பணிகள், அனைத்தும் வரும் டிசம்பர் மாதம் இறுதிக்குள் முடிக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும், இவ்வாறு மாநகராட்சி அதிகாரி கூறினார்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...