காரமடை அருகே நெல்லித்துறை ஊராட்சிக்குட்பட்ட,கடமான் கோம்பை பழங்குடியின கிராமத்தை சேர்ந்த முதியவர், உதவித்தொகை பெற்று திரும்பிய போது காட்டுயானை தாக்கி படுகாயமடைந்தார்.
கோவை: காரமடை அருகே நெல்லித்துறை ஊராட்சிக்குட்பட்ட, கடமான் கோம்பை பழங்குடியின கிராமத்தை சேர்ந்த முதியவர், உதவித்தொகை பெற்று திரும்பிய போது காட்டுயானை தாக்கி படுகாயமடைந்தார்.
காரமடை அருகே நெல்லித்துறை ஊராட்சிக்குக்குட்பட்ட கடமான்கோம்பை பழங்குடியின கிராமத்தை சேர்ந்த ரங்கரேசன் (70). இவர், நேற்று கடமான் கோம்பையில் இருந்து பில்லூர் அணை பகுதிக்கு முதியோர் உதவித்தொகை வாங்க அடர்ந்த வனப்பகுதி வழியாக வந்துள்ளார்.
அப்போது, உதவித்தொகை பெற்ற பின்னர் மீண்டும் கடமான்கோம்பை பகுதிக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது, புதரில் மறைந்து இருந்த காட்டுயானை ஒன்று திடீரென ரங்கரேசனை தாக்கியது. அப்போது, இவரின் சப்தம் கேட்டு அந்த வழியாக வந்த மற்றவர்கள் யானையை அங்கிருந்து விரட்டினர்.
பின்,காயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்த முதியவரை, 108 ஆம்புலன்ஸ் மூலம், மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு, அவரை
பரிசோதித்த மருத்துவர்கள், அவரின் இடுப்பு, தோல், கை, கால் உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டிருப்பதால், அவரை மேல் சிசிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இது குறித்து, மாவட்ட வன அலுவலர் வெங்கடேஸ் தலைமையிலான வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.