கிராமங்களில் அடிப்படை வசதிகள் வேண்டும்; ஒன்றியக்குழு கூட்டத்தில் உறுப்பினர்கள் கோரிக்கை

கிராமங்களில் அடிப்படை வசதிகள் வேண்டும்; ஒன்றியக்குழு கூட்டத்தில் உறுப்பினர்கள் கோரிக்கை.

கோவை: பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை தாலுகாவில், பொள்ளாச்சி வடக்கு,தெற்கு, ஆனைமலை என 3 ஒன்றியங்கள் உள்ளன. ஒன்றிய அலுவலகத்தில் மாதம் ஒருமுறை, கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது.

இதில், நேற்று ஆனைமலை ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம், ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில், ஒன்றியக்குழு தலைவர் சாந்திகார்த்திக் தலைமையில் நடந்தது.

அக்கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளராக வால்பாறை சட்டமன்ற உறுப்பினர், கஸ்தூரி வாசு கலந்து கொண்டு, கொரோனா நோய் பரவலை தடுக்க, பொதுமக்கள் அவசியமின்றி வீட்டை விட்டு வெளியேறுவதை தவிர்க்க வேண்டும் என்றும், பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். 



இதை அடுத்து கூட்டத்தில் 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன --ஊராட்சி பகுதிகளில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும், மின் விளக்குகள் அமைத்து தர வேண்டும், கம்பாலபட்டி ஊராட்சியில் செயல்படாமல் உள்ள சித்த மருத்துவ கட்டிடத்தை செயல்படுத்த வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர். 

தற்போது, ஊராட்சி ஒன்றிய அலுவலகம் சார்பில், டெங்கு காய்ச்சல் மற்றும் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஊராட்சி பகுதிகளில் கிருமிநாசினி தெளிப்பது சத்து மாத்திரைகள் வழங்குவது, போன்ற நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது. இதில் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்றும், ஒன்றிய அலுவலர்கள் தெரிவித்தனர்.

ஒன்றியக்குழு துணைத் தலைவர் கோபால்ரத்தினம், ஒன்றிய ஆணையாளர் பாலசுப்பிரமணியம், வட்டார வளர்ச்சி அலுவலர் லதாமற்றும் ஒன்றிய குழு உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...