கோவை: தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட ஆப்பிரிக்க கெளுத்தி மீன் வளர்ப்பு பண்ணை இன்று கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் செயல்பட்டு வந்தது தெரியவந்துள்ளது. அந்த பணியில் உள்ள மீன்களை அழிக்க, சார் ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பொள்ளாச்சி அருகே உள்ள செடிமுத்தூர் என்ற கிராமத்தில், தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில், பண்ணை குட்டை அமைத்து, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்க கெளுத்தி மீன்கள் வளர்க்கப்பட்டு விற்பனை செய்வதாக வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, இன்று பொள்ளாச்சி சார் ஆட்சியர் வைத்தியநாதன் தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள், தனியார் தோட்டத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அங்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்க கெளுத்தி மீன்கள் வளர்க்கப்பட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில், அங்கு வளர்க்கப்பட்டு வரும் ஆப்ரிக்க கெளுத்தி மீன்களை அழிப்பதற்கு, சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு, சார் ஆட்சியர் உத்தரவிட்டார்.
மேலும், தோட்டத்து உரிமையாளரிடம் விசாரணை மேற்கொண்டு வரும் வருவாய்த்துறையினர், சம்பந்தபட்ட நபர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளவும் முடிவு செய்துள்ளனர்.
ஆப்பிரிக்க கெளுத்தி மீன்கள், தான் வாழ்வதற்காக மற்ற மீன்களை கொன்று தின்னும் குணம் படைத்தது. இதனால், உள்நாட்டு மீன் வகைகள் அழியும் அபாயம் உள்ளது. மேலும், இந்த மீன்களால் சுகாதார சீர்கேடும் ஏற்படும். எனவே, இவ்வகை மீன்கள் தமிழகத்தில் வளர்ப்பதற்கும், விற்பதற்கும் அரசு தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.