திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், திருப்பூர் வடக்கு மகளிர் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் பெண் காவல் ஆய்வாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, காவல் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது. தற்போது, காவல்நிலைய வளாகத்தில் பொதுமக்களின் புகார்கள் பெறப்பட்டு வருகிறது.
பாதிக்கபட்ட பெண் காவலர் திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், அவருடன் பணியாற்றி வந்த உதவி ஆய்வாளர் உட்பட பெண் காவலர்கள் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், காவல் நிலையம் முழுவதும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டது இதனிடையே, புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம், காவல் நிலைய வளாகத்திலேயே மனுக்கள் பெறப்பட்டு வருகிறது.
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் பணியாற்றும் குழந்தைகள் நல பெண் மருத்துவர், அவரின் கணவர், மற்றும் ஊரக காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.
இன்று ஒரே நாளில் திருப்பூரில் 48 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தின் மொத்த தொற்றின் எண்ணிக்கை 1197 ஆக உயர்ந்துள்ளது.