பொள்ளாச்சியில் முறையாக திட்டமிடாத பாதாள சாக்கடை பணிகளால் பொதுமக்கள் அவதி; திமுகவினர் வீடுகளின் முன்பு கருப்பு கொடி ஆர்ப்பாட்டம்

கோவை: திட்டமிடாத பாதாள சாக்கடை பணிகளால் மக்களின் வரிப்பணம் வீண் ஆவதாக குற்றம் சாட்டி, பொள்ளாச்சியில் திமுகவினர் வீடுகளின் முன்பு கருப்பு கொடி ஏற்றி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கோவை: திட்டமிடாத பாதாள சாக்கடை பணிகளால் மக்களின் வரிப்பணம் வீண் ஆவதாக குற்றம் சாட்டி, பொள்ளாச்சியில் திமுகவினர் வீடுகளின் முன்பு கருப்பு கொடி ஏற்றி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கடந்த 2016 ஆம் ஆண்டு பொள்ளாச்சி நகரப்பகுதியில் உள்ள 36 வார்டுகளில் பாதாள சாக்கடை திட்டம் 110 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு

தொடங்கப்பட்டது. மேலும், தார் சாலை சீரமைப்பு உள்ளிட்ட பணிகளுக்கு 70 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, பணிகள் நான்காண்டு காலமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், பொள்ளாச்சி மார்க்கெட் ரோடு, கடைவீதி, புதிய திட்ட சாலை உள்ளிட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை சாலைகள் தோண்டப்பட்டு குழிகள் பல மாதங்களாகியும் மூடப்படாமல் பணிகள் நடைபெறாமல் தேங்கி உள்ளது, என திமுகவினர் குற்றம் சாட்டினர்.

மேலும், பல இடங்களில் பாதாள சாக்கடை குழி தோண்டும்போது, குடிநீர் குழாய்கள் உடைப்பு ஏற்பட்டு நகர பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. இப்படி, சேதமடைந்த சாலைகளால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர், என்று தெரிவித்தனர்.

எனவே, நான்காண்டு காலமாக ஆமை வேகத்தில் நடைபெற்றுவரும் பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், என்றும் முறையாக திட்டமிடாததால் இன்று பொள்ளாச்சி நகரமே பாதாளம் போல் காட்சி அளிப்பதாக, தெரிவித்த திமுகவினர், தமிழக அரசின் அலட்சியத்தால் மக்களின் வரிப்பணம் வீணாவதாக தெரிவித்தனர்.

இதை கண்டித்து, பொள்ளாச்சி நகர திமுக சார்பில் நிர்வாகிகள் வீட்டின் முன்பு கருப்புக் கொடி ஏற்றி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ், நகர திமுக அவைத்தலைவர் வடுகை பழனிசாமி, மாவட்ட பிரதிநிதி அமுதபாரதி, மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் செந்தில் மற்றும் கழக நிர்வாகிகள் அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Newsletter

வால்பாறையில் தொடர் மழை: பள்ளி மாணவர்கள், எஸ்டேட் தொழிலாளர்கள் கடும் அவதி

வால்பாறை மற்றும் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் இரவு முழுவதும் பெய்த கனமழை இன்று காலையிலும் நீடித்ததால், பள்ளி மாணவர்கள...

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...