அயோத்தியில் ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டு விழா..! கோவையில் பாதுகாப்பு பணிகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் ஆய்வு!

கோவை: அயோத்தியில் ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்ற நிலையில், கோவை மாவட்டத்தில் பாதுகாப்பு பணிகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசு நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

கோவை: அயோத்தியில் ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்ற நிலையில், கோவை மாவட்டத்தில் பாதுகாப்பு பணிகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசு நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றதையொட்டி கோவை மாவட்ட காவல் எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

வரலாற்று சிறப்புமிக்க அயோத்தியில் இன்று ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல குறிப்பிட்ட பதட்டமான பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

இதில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாத வண்ணம் கோவை மேட்டுப்பாளையத்தில் காவல்துறையின் சார்பில் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.



இந்த ஆய்வின் போது ஊட்டி சாலையில் உள்ள சோதனை சாவடிக்கு சென்று இ-பாஸ் மூலம் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும் பொதுமக்களை பார்வையிட்டார். மேலும் போலியான இ-பாஸை எப்படி கண்டுபிடிப்பது என்று பணியிலிருந்த காவலர்களுக்கு செய்முறை விளக்கம் அளித்தார்.

மேலும் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருவதால் பேரிடர் மேலாண்மை குழுவுடன் இணைந்து ஆய்வு செய்து கரையோர பகுதி மக்களின் பாதுகாப்பு குறித்தும் காவல்துறை எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்தும் காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அதேபோல, மேட்டுப்பாளையம் நகரின் முக்கிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட கண்காணிப்பாளர் நகரின் முக்கிய பகுதிகளில் செயல்படாத கண்காணிப்பு கேமராக்களை கண்டறிந்து உடனடியாக பழுது நீக்க உத்தரவிட்டார். மேலும் வியாபாரிகள், தன்னார்வலர்கள் அனைவரும் காவல்துறையினருடன் உடன் இணைந்து குற்ற நடவடிக்கைகளை கண்டுபிடிக்க சிசிடிவி கேமராக்களை பொருத்த முன்வரவேண்டும் எனவும் தெரிவித்தார்.

மேலும் காவல் நிலையத்தில் கிடப்பில் இருக்கும் வழக்குகளை விரைந்து முடிக்கவும் காவல் நிலையத்திற்கு வரும் பொதுமக்களிடம் அவர்களின் தன்மையறிந்து அணுகவேண்டும் எனவும் காவல் நிலையத்தில் பராமரிக்கப்படும் கோப்புகளை முறையாக பராமரிக்க வேண்டும் எனவும் காவல் நிலையத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் எனவும் அவர் அறிவுரைகள் வழங்கினார்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...