கோவை: கோவை சிறுவாணி அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தென்மேற்கு பருவமழை காரணமாக அணையின் நீர்மட்டம் 12.86 அடியாக உயர்ந்துள்ளது.

கோவை மாநகராட்சிக்குட்பட்ட 36 வார்டுகளுக்கும் நுாற்றுக்கணக்கான வழியோர கிராமங்களுக்கும் சிறுவாணி அணை நீர் குடிநீராக விநியோகம் செய்யப்படுகிறது.
சிறுவாணி அணையில் 22.47 சதுர கிலோ மீட்டர் பரப்பளவிற்கு நீரை தேக்க முடியும். 49.53 அடி உயரம் கொண்ட இந்த அணை கடல் மட்டத்தில் இருந்து 878.5 மீட்டர் உயரமுள்ளது. 650 மில்லியன் கன அடி நீர் கொள்ளவு கொண்டது.
கோவையில் தென்மேற்கு பருவமழை துவங்கியதில் இருந்து கடந்த சில நாட்களாக அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக அணையின் நீர்மட்டம் தற்போது 12.86 அடியாக உயர்ந்துள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘மாநகராட்சி சார்பாக நேற்று சிறுவாணியில் இருந்து 64 எம்.எல்.டி நீர் குடிநீருக்காக எடுக்கப்பட்டது,’’ என்றார்.