வீட்டில் ஒரு நிலைப்பாடு, வெளியில் ஒரு நிலைப்பாடு என்ற கொள்கையை கொண்டது திமுக - பாரத் சேனா நிறுவன தலைவர் செந்தில் கண்ணன் விமர்சனம்!

கோவை: வீட்டில் ஒரு நிலைப்பாடு, வெளியில் ஒரு நிலைப்பாடு என்ற கொள்கையை கொண்டது திமுக என்று பாரத் சேனா நிறுவனத் தலைவர் செந்தில் கண்ணன் தெரிவித்துள்ளார்.

கோவை: வீட்டில் ஒரு நிலைப்பாடு, வெளியில் ஒரு நிலைப்பாடு என்ற கொள்கையை கொண்டது திமுக என்று பாரத் சேனா நிறுவனத் தலைவர் செந்தில் கண்ணன் தெரிவித்துள்ளார்.

கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் பாரத் சேனா நிறுவனத் தலைவர் செந்தில் கண்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது பேசிய அவர், கடந்த வாரம் கோவை சுந்தராபுரம் பகுதியில் பெரியார் சிலை மீது காவி சாயம் வீசியதற்கு பாரத் சேனா தெற்கு மாவட்ட அமைப்பாளரான அருண்கிருஷ்ணன் கைது செய்யப்பட்டார். இந்து கடவுள்களை அவமதிக்கும் வகையில் யார் நடந்து கொண்டாலும் எதிர்வினைகள் நடக்கும் என்றும் இதனை நாங்கள் செய்யாவிட்டாலும் மற்ற இந்து அமைப்புகள் செய்யும் என்றார்.

பெரியார் சிலையை அவமதித்தது தவறு என்றால் தமிழ் கடவுளான முருகக் கடவுளின் கந்த சஷ்டி கவசத்தை இழிவாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்ததும் தவறு தான் என்றார். திமுக, காங்கிரஸ், மதிமுக, போன்ற கட்சியினர் இந்து இறையாண்மைக்கு எதிராக செயல்படுகின்றன எனவும் குற்றம் சாட்டினார்.

அதேபோல, இந்து மக்கள் யாரும் வருகின்ற தேர்தலில் இந்த கூட்டணிக்கு வாக்களிக்கக் கூடாது எனவும் தமிழ்நாடு என்பது பெரியார் மண்ணல்ல எனவும் நாயன்மார்களும் ஆழ்வார்களுக்கும் இருந்த மண் இது. இதை எப்பொழுதும் பெரியார் மண்ணாக மாற்ற நாங்கள் விடமாட்டோம் என தெரிவித்தார்.

திமுகவின் செயல்பாடுகள் இந்து மதத்திற்கு எதிராக உள்ளதாகவும் இந்து மதத்திற்கு ஆதரவாக நாங்கள் எந்த முடிவையும் சந்திக்க தயாராக உள்ளோம் எனவும் தெரிவித்தார்.

மேலும், பெரியார் சிலை அவமதிப்பு விஷயத்திற்கு கந்த சஷ்டி கவச அவமதிப்பு தான் முதல் காரணம் எனவும் யார் வினையாற்றினாலும் அதற்கு எதிர்வினை உண்டு என்றவர், கந்தசஷ்டி கவசம் அவமதிப்பு விவகாரத்தில் தற்போதுள்ள தமிழக அரசும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது வருத்தம் அளிப்பதாகவும் இதனை கண்டிப்பதாக தெரிவித்தார்.

எங்கள் அமைப்பை பொறுத்தவரை இந்துக்களுக்கு தான் முன்னுரிமை எனவும் இந்துக்கள் தான் பிரதிநிதிகளாக இருக்க வேண்டும் எனவும் இந்துக்கள் தான் உறுப்பினர்களாக இருக்க வேண்டும் என்ற கொள்கை இருப்பதாக கூறிய அவர், பாரதிய ஜனதாவுடன் எங்களது கூட்டணி இருப்பினும் எங்களது கருத்துக்கள் என்பது இந்துக்களுக்கு மட்டுமே முன்னுரிமை என்பதாகும் என்றார். திமுக தலைவர் ஸ்டாலின் வீட்டில் ஒரு நிலைப்பாடும் வெளியில் மக்கள் முன்பு ஒரு நிலைப்பாடும் என கொண்டுள்ள ஸ்டாலின், வைகோ, சீமான் ஆகியோரை கண்டிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Newsletter

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...

கோவையில் ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததாக கருதப்பட்ட புகைப்படக் கலைஞர் வழக்கில் அதிர்ச்சி திருப்பம்; திட்டமிட்டு கொலை செய்ததாக 2 பேர் நீதிமன்றத்தில் சரண்

கோவை தடாகம் அருகே காணாமல் போன புகைப்படக் கலைஞர் பிரவீன், ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததாக முதலில் கருதப்பட்ட நிலையில், அவரை...

வடவள்ளியில் அனுமதியின்றி போஸ்டர் ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 40-ல் உள்ள வடவள்ளி பகுதியில் அனுமதியின்றி விளம்பர போஸ்டர்கள் ஒட்டிய தனியா...

கோவையில் விடுதிக்குள் திருட முயன்ற வடமாநில வாலிபர் கையும் களவுமாக பிடிபட்டார்; போலீசார் விசாரணை

நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் தனியார் ஆண்கள் விடுதியில் பைக் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைத் திருட முயன்றதாகக் கூறப்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய் தயாரிப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூலை 8, 9 தேதிகளில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய்கள் தயாரிப்பு இரண்டு நாள் ப...