கோவை: கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 37 இடங்கள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் சுமார் 380 தெருக்கள் அடங்கும்.

கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக பரவி வருகிறது. நேற்று வரை 3459 பாதிக்கப்பட்ட நிலையில், 1491 வீடு மற்றும் மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர். கடந்த ஒரு வார காலத்தில் மட்டும் கோவை மாவட்டத்தில் சுமார் 600க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதனிடையே கோவை மாவட்டத்திற்கு வெளியூர், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து வருவோரிடம் இருந்து உள்ளூர் வாசிகளுக்கு கொரோனா வைரஸ் அதிகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாவட்டத்திற்குள் புதிதாக வரும் நபர்கள், கொரோனா வைரஸ் உறுதியானவர்களிடம் தொடர்பில் இருந்தவர்கள் என அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், "கோவை மாநகராட்சியில் 37 பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் 380 தெருக்களில் 912 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்."
மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தினமும் காய்ச்சல் முகாம்கள் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் நடத்தப்பட்டு வருகின்றன," என்றார்.