கோவை: கோவையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.39 ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தை தொட்டது.

பங்குச் சந்தையில் நிலவும் மந்தநிலை காரணமாக, முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்கின்றனர். இதனால், தங்கம் விலை உயர்ந்துள்ளது.
சர்வதேச பொருளாதாரச் சூழல், உலகச் சந்தையில் தங்கத்தின் மதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. பல்வேறு காரணங்களால் தங்கம் விலை உயர்ந்து வந்த நிலையில், கோவையில் இன்று ஆபரணத் தங்கம் ரூ.39 ஆயிரத்தைத் தாண்டி, புதிய உச்சத்தைத் தொட்டது.
கோவையில் தங்கத்தின் விலை நாள்தோறும் உயர்ந்து வந்த நிலையில், நேற்று மாலை ஆபரணத் தங்கம் பவுன், ரூ.38,776க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், இன்று காலை ஆபரணத் தங்கத்தின் விலை 39,032 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு புதிய உச்சத்தை எட்டியுள்ளது.