திருப்பூர்: திருப்பூரில் இன்று புதிதாக 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இரண்டு பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும், மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் மாவட்டத்தில் பாதிப்பின் எண்ணிக்கை 600 ஆக உயர்ந்துள்ளது. குறிப்பாக இன்று திருப்பூரில் கொம்பை தோட்டத்தில் 2 பேர், உடுமலைப்பேட்டையில் 1 நபர், தாராபுரத்தில் 4 பேர் உட்பட பல்வேறு பகுதிகளில் இன்று 33 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
மேலும், இன்று 15 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 294 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திருப்பூர் ப்ரியங்கா நகரை சேர்ந்த 59 வயதான ஆண் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயரிழந்தார். மேலும், திருப்பூர் எஸ் வி நகரை சேர்ந்த 71 வயதான முதியவர் கொரோனா தொற்றின் காரணமாக கடந்த ஜூலை 9 ஆம் தேதி கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரும் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் இன்று புதிதாக 178 பேர் உட்பட 2877 பேர் வீட்டுக்கண்காணிப்பில் இருப்பதாகவும், சிகிச்சை அளிக்கப்படுவதாகவும்,
இன்று ஒரு நாளில் மட்டும் 993 பேருக்கு கொரோனா மாதிரி பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, மாவட்ட ஆட்சியர், விஜய கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.