சத்திய மங்கலம் புலிகள் காப்பகம் பற்றிய காணொளி வெளியீடு..!

சத்திய மங்கலம் புலிகள் காப்பகம் பற்றிய காணொளி வனத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.


சத்திய மங்கலம் புலிகள் காப்பகம் பற்றிய காணொளி வனத்துறை சார்பில் வெளியிடப்பட்டு உள்ளது.

இக்காப்பகம் வடக்கு மற்றும் மேற்குப் பகுதியில் கர்நாடக வனப்பகுதியும், தெற்கே நீலகிரி மற்றும் கோவை வனகோட்டப்பகுதிகளும் எல்லைகளாக அமைந்துள்ளது. இங்கு யானை, புலி, சிறுத்தை, காட்டெருமை, செந்நாய், கரடி உள்ளிட்ட 35 வகை பாலூட்டிகளும் உள்ளன. 241 வகையான பறவைகளும்,150 வண்ணத்துப் பூச்சிகளும், 4 வகையான பாறு கழுகுகள், மீன் உள்ளிட்ட முதலைகளும் இங்கு வாழ்கிறது.

இங்கு 60 புலிகள் வாழ்வதோடு மட்டும் இல்லாமல், 111 சிறுத்தைகள், 800க்கு மேற்பட்ட யானைகள் வாழ்வதாக அண்மையில் வெளியான தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் தெரிவிக்கிறது. தமிழ்நாட்டில் மிகப்பெரிய சரணாலயமாக சத்திய மங்கலம் புலிகள் சரணாலயம் விளங்குகிறது.

இது பற்றிய காணொளி சத்தியமங்கலம் வனத்துறை சார்பில் youtube ல் பதிவேற்ற செய்யப்பட்டு இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. 4 நிமிடம் 32 விநாடிகள் கொண்ட வீடியோவில் சத்திய மங்கலம் வனபரப்பை முழுவதும் படமாக்கப்பட்டு இருக்கும். இந்த முயற்சிக்கு முக்கிய காரணமாக இருந்தவர் சத்திய மங்கலம் சரணாலயத்தின் வன மற்றும் கள இயக்குனர் முனைவர் நாகநாதன் அவர்கள்.

இது தொட‌ர்பாக அவரிடம் பேசிய போது, சிறிய அளவில் உருவாக்கப்பட்டிருந்த காணொளி நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இதில் வனத்துறை சார்ந்த அனைவருக்கும் பங்கு இருக்கிறது. இங்கு வெப்ப மண்டல பசுமையான காடுகள், அரை பசுமையான காடுகள், கலப்பு இலையுதிர் காடுகள், முள் காடுகள் மற்றும் உலர்ந்த இலையுதிர் காடுகள் என்று 5 வகையான வெப்பமண்டல வனப்பகுதியாக உள்ளது.

இங்கு புதர் காடு, வறண்ட இலையுதிர் காடு, காவிரிக் கரையோர நீர்மத்தி நிறைந்த ஆற்றோரக்காடு போன்ற காட்டுவகைகளைக் கொண்டது. உயிர் நதியாக மாயாறு இருப்பதால் வன விலங்குகளும், காடுகளும் உயிர் பெற்று நிற்கிறது. கிழக்கு தொடர்ச்சி மலையும், மேற்கு தொடர்ச்சி மலையும் சந்திக்கும் பகுதியாக இப்பகுதி விளங்குகிறது.

சத்தியமங்கலம் வாழ் மக்கள் தங்களைச் சுற்றியுள்ள காடுகளின் அழகையும், உயிரோட்டத்தையும், இந்த இடத்தை ஏன் பாதுகாக்க வேண்டும் என்பதையும் புரிந்து கொள்ள இந்த காணொளி மிகவும் உதவும். அடுத்தகட்டமாக சத்தியமங்கலம் வனப்பகுதியை நல்ல தரத்தில் ஆவணப்படமாக எடுப்பது தான் எங்களுடைய விருப்பம் என்று தெரிவித்தார்.

அவர்களின் முயற்சிக்கு நம்முடைய வாழ்த்துக்கள்..!

Youtube link: https://youtu.be/oXHm_bhRmRw

Newsletter

வடவள்ளியில் அனுமதியின்றி போஸ்டர் ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 40-ல் உள்ள வடவள்ளி பகுதியில் அனுமதியின்றி விளம்பர போஸ்டர்கள் ஒட்டிய தனியா...

கோவையில் விடுதிக்குள் திருட முயன்ற வடமாநில வாலிபர் கையும் களவுமாக பிடிபட்டார்; போலீசார் விசாரணை

நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் தனியார் ஆண்கள் விடுதியில் பைக் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைத் திருட முயன்றதாகக் கூறப்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய் தயாரிப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூலை 8, 9 தேதிகளில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய்கள் தயாரிப்பு இரண்டு நாள் ப...

அமராவதி-திருமூர்த்தி அணைகளின் இன்றைய (06.07.2026) நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 6ஆம் தேதி 43.44 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 38.2...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையால் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஜூலை 6ஆம்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஜூலை 7 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மேயர் கா. ரங்கநாயகி ரா...