கோவையில் பெரியார் சிலை மீது காவிச்சாயம் வீசிய வழக்கில் பாரத் சேனா நிர்வாகியை இரண்டு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி!

கோவை: பெரியார் சிலை மீது காவிச்சாயம் வீசிய வழக்கில் பாரத் சேனா நிர்வாகியை இரண்டு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

கோவை: பெரியார் சிலை மீது காவிச்சாயம் வீசிய வழக்கில் பாரத் சேனா நிர்வாகியை இரண்டு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. 

கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள பெரியார் சிலை மீது கடந்த 17ம் தேதி காவிச்சாயம் வீசியதை தொடர்ந்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபரை போலீசார் தேடி வந்த நிலையில் குனியமுத்தூர் காவல் துறையினர் கலகம் ஏற்படுத்துதல், விரோத உணர்ச்சியை தூண்டுதல், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல் ஆகிய 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.

இதையடுத்து, போத்தனூர் அண்ணா நகர் பகுதியை சேர்ந்த பாரத் சேனா அமைப்பின் தெற்கு மாவட்ட அமைப்பாளர் அருண் கிருஷ்ணன் போத்தனூர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். இதைத்தொடர்ந்து அவரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில், பெரியார் சிலை மீது காவிச்சாயம் வீசிய வழக்கில் கைதான பாரத் சேனா நிர்வாகி அருண் கிருஷ்ணனை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க குனியமுத்தூர் போலீசார் அனுமதி கோரி இருந்தனர். இதற்கு இரண்டு நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோவை மூன்றாவது குற்றவியல் நடுவர் நீதிமன்ற பொறுப்பு நீதிபதி தமிழினியன் அனுமதி அளித்து உத்தரவு அளித்தார். 

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...