திருப்பூரில் முகநூல் லைவ் வீடியோவில் மதுபோதையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட இளைஞர் - போலீசார் விசாரணை

திருப்பூர்: திருப்பூரில் முகநூல் லைவ் வீடியோவில் இளைஞர் ஒருவர் மதுபோதையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர்: திருப்பூரில் முகநூல் லைவ் வீடியோவில் இளைஞர் ஒருவர் மதுபோதையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்தவர் ராம்குமார் (37). இவர் திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சுகாசினி (34) மகன் நவநீத் (13) ஆகிய இருவருடனும் திருப்பூர் மும்மூர்த்தி நகர் பகுதியில் வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறார். இவரது மனைவி சுகாசினி அருகில் உள்ள பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். 

இந்நிலையில், இன்று மதியம் தாராபுரத்தில் உள்ள தனது தந்தைக்கு போன் மூலம் அழைத்த ராம்குமார் தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் தனது மகனை பத்திரமாக பார்த்துக்கொள் என சொல்லிவிட்டு இணைப்பைத் துண்டித்துள்ளார். 

அதன் பிறகு தனது முகநூல் பக்கத்தில் லைவ் வீடியோவை ஆன் செய்த ராம்குமார் துணி ஒன்றை எடுத்து தனது கழுத்தில் சுற்றிக்கொண்டு பேனில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த காட்சிகள் அனைத்தும் முகநூலில் நேரடியாக ஒளிபரப்பானது. இதனைக்கண்ட அவரது நண்பர்கள் அக்கம் பக்கத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். 

இது குறித்து தகவலறிந்து சுகாசினி நேரில் சென்று பார்த்த போது ராம்குமார் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார். அவரை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கே அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 

இதனையடுத்து, தகவல் அறிந்து விரைந்து வந்த அனுப்பர்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் ராம்குமார் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னதாக எழுதிய கடிதத்தை கைப்பற்றினர். அதில் தனது இறப்பிற்கு யாரும் காரணம் இல்லை எனவும் மானம் கெட்ட உலகம்.. இதில் வாழ எனக்கு விருப்பம் இல்லை.. இந்த உயிர், மயிருக்கு சமம்.. யாரும் பீல் பண்ணாதீங்க என எழுதி வைத்துள்ளார்.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள அனுப்பர்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முகநூலில் நேரலையாக தற்கொலை செய்து கொள்ளும் வீடியோவை பதிவிட்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் திருப்பூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவையில் விடுதிக்குள் திருட முயன்ற வடமாநில வாலிபர் கையும் களவுமாக பிடிபட்டார்; போலீசார் விசாரணை

நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் தனியார் ஆண்கள் விடுதியில் பைக் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைத் திருட முயன்றதாகக் கூறப்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய் தயாரிப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூலை 8, 9 தேதிகளில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய்கள் தயாரிப்பு இரண்டு நாள் ப...

அமராவதி-திருமூர்த்தி அணைகளின் இன்றைய (06.07.2026) நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 6ஆம் தேதி 43.44 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 38.2...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையால் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஜூலை 6ஆம்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஜூலை 7 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மேயர் கா. ரங்கநாயகி ரா...

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...