நீலகிரி: நீலகிரியில் இன்று புதிதாக 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் பாதிப்பின் எண்ணிக்கை 528 ஆக உயர்ந்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, நீலகிரி மாவட்டத்தில் சமீபத்தில் திருமண நிகழ்வில் கடந்து கொண்டவர்கள் மற்றும் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களால் கொரோனா தொற்று பரவி வருகிறது.
அதன்படி இன்று தங்காடில் திருமண நிகழ்வில் கலந்து கொண்ட மஞ்சக்கொம்பை பகுதியை சேர்ந்த 3 பேர், அதே போன்று உதகை தட்டநேரியில் 70 வயதான ஆண் மற்றும் 17 வயதான ஆண் உட்பட மொத்தம் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
தொற்று அதிகரித்து வரும் நிலையில், கொரோனாவிலிருந்து இதுவரை, 279 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும்,
247 மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.
இதோடு கொரோனா தொற்று வேகமாக பரவும் காலக்கட்டம் என்பதால் மக்கள் தேவையின்றி பொது இடங்களுக்கு வருவதை தவிர்க்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.