உதகையில் பயன்படுத்திய கொரொனா தடுப்பு கவச உடைகளை குரங்குகள் இழுத்து சென்று விளையாடும் அவலம்..!

நீலகிரி: உதகையில் பயன்படுத்திய கொரொனா தடுப்பு கவச உடைகளை (PPE kit) குரங்குகள் இழுத்து செல்வதாக புகார் எழுந்துள்ள நிலையில், அவை முறையாக அப்புறப்படுத்தப்படுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

நீலகிரி: உதகையில் பயன்படுத்திய கொரொனா தடுப்பு கவச உடைகளை (PPE kit) குரங்குகள் இழுத்து செல்வதாக புகார் எழுந்துள்ள நிலையில், அவை முறையாக அப்புறப்படுத்தப்படுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

நீலகிரி மாவட்டம், உதகையில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் கொரோனா நோயாளிகளுக்கான சிகிச்சை மையம், கடந்த திங்கள்கிழமை முதல் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் 50 க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அங்கு பணிபுரியும் மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்கள், சுய பாதுகாப்பு கவச உடைகளோடு (PPE Kit) அணிந்து அவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

ஆனால், சிகிச்சைக்கு பிறகு, அவர்கள் பயன்படுத்திய பாதுகாப்பு கவசங்கள் சரியான முறையில் அப்புறப்படுத்தப்படாமல் அலட்சியமாக கையாளப்படுவதாக கூறப்படுகின்றது.

மேலும், அவற்றை குரங்குகள் பள்ளி வளாகத்தில் இருந்து வெளியே தூக்கி கொண்டு வரும் சம்பவங்களும் நடைபெறுவதாக குற்றம்சாட்டப்பட்டது.



இதனை, ஊர்ஜிதப்படுத்தும் விதமாக, இன்று பள்ளியில் உள்ள கொரோனா சிகிச்சை மையப் பகுதியில், பயன்படுத்திய சுய பாதுகாப்பு கவச உடை (PPE Kit) மற்றும் மாத்திரை டப்பாக்கள், பயன்படுத்திய ஊசிகளை, குரங்கு கூட்டம் வனப்பகுதிக்குள் இழுத்து செல்லும் காட்சிகள் பெரும் சர்சையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், இச்சம்பவம் குறித்து மாவட்ட சுகாதார இணை இயக்குநரிடம் கேட்ட போது, இதுவரை அப்படி எந்த தகவலும் கிடைக்கபெறவில்லை எனவும், சம்பவத்தை, விசாரித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் வேகமாக பரவும் தன்மை கொண்டதால் இந்த உடைகளில் இருக்கும் கிருமிகள் மற்றவர்களுக்கு பரவ வாய்ப்புள்ளது, என மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். மேலும், பயன்படுத்தப்பட்ட சுய பாதுகாப்பு கவசங்களை உரிய வழிகாட்டுதல்படி அழிக்க

மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

கோவையில் விடுதிக்குள் திருட முயன்ற வடமாநில வாலிபர் கையும் களவுமாக பிடிபட்டார்; போலீசார் விசாரணை

நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் தனியார் ஆண்கள் விடுதியில் பைக் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைத் திருட முயன்றதாகக் கூறப்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய் தயாரிப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூலை 8, 9 தேதிகளில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய்கள் தயாரிப்பு இரண்டு நாள் ப...

அமராவதி-திருமூர்த்தி அணைகளின் இன்றைய (06.07.2026) நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 6ஆம் தேதி 43.44 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 38.2...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையால் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஜூலை 6ஆம்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஜூலை 7 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மேயர் கா. ரங்கநாயகி ரா...

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...