வால்பாறையில் வாழைத் தோட்டம் ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு..! எம்எல்ஏ நேரில் ஆய்வு

கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் வாழைத் தோட்டம் ஆற்றில் இன்று திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக, டோபி காலனி அரசு போக்குவரத்துக்கழக பணிமனை பகுதியில் வெள்ளம் புகுந்தது.

கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் வாழைத் தோட்டம் ஆற்றில் இன்று திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக, டோபி காலனி அரசு போக்குவரத்துக்கழக பணிமனை பகுதியில் வெள்ளம் புகுந்தது.



தகவலறிந்த வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட வாழைத்தோட்டம் ஆறு, அரசு போக்குவரத்து கழக பணிமனை பகுதிகளை நேரில் ஆய்வு செய்தார். தொடர்ந்து, ஸ்டேன்மோர் ஆற்றுப்பகுதியையயும், புதிதாக அமையவுள்ள போட் ஹவுஸ் பகுதியையும் பார்வையிட்டார்.



தொடர்ந்து, வால்பாறை நகராட்சி ஆணையர் வட்டாட்சியர் அரசு போக்குவரத்து கழக துணை மண்டல மேலாளர் ஆகியோருடன் வெள்ள சூழ்நிலை குறித்து ஆலோசனை நடத்தினர்.

வால்பாறையில் தொடர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் பாதிக்கப்படும் மக்களை தங்கவைக்க அரசு கலை அறிவியல் கல்லூரியில் ஏற்பாடு செய்யும்படி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வில், நகராட்சி ஆணையர் பவுன்ராஜ், வட்டாட்சியர் ராஜா, அரசு போக்குவரத்து கழக மண்டல உதவி மேலாளர், ஜோதி மணிகண்டன், தொழிற்சங்க தலைவர் வால்பாறை அமீது உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

வடவள்ளியில் அனுமதியின்றி போஸ்டர் ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 40-ல் உள்ள வடவள்ளி பகுதியில் அனுமதியின்றி விளம்பர போஸ்டர்கள் ஒட்டிய தனியா...

கோவையில் விடுதிக்குள் திருட முயன்ற வடமாநில வாலிபர் கையும் களவுமாக பிடிபட்டார்; போலீசார் விசாரணை

நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் தனியார் ஆண்கள் விடுதியில் பைக் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைத் திருட முயன்றதாகக் கூறப்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய் தயாரிப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூலை 8, 9 தேதிகளில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய்கள் தயாரிப்பு இரண்டு நாள் ப...

அமராவதி-திருமூர்த்தி அணைகளின் இன்றைய (06.07.2026) நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 6ஆம் தேதி 43.44 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 38.2...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையால் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஜூலை 6ஆம்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஜூலை 7 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மேயர் கா. ரங்கநாயகி ரா...