கோவை: கோவையில் தங்க நகை பட்டறைகளை திறக்க வலியுறுத்தி பெரியகடை வீதியில் தங்க நகை தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடந்த மாதம் சலிவன் வீதி, செல்வபுரம் போன்ற பகுதிகளில் கொரோனா நோய்த்தொற்று அதிகமாக பரவி வருவதாக நகை பட்டறைகளை மறு உத்தரவு வரும் வரை மூட மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டது. தங்க நகை செய்யும் பட்டறைகளில் அரசு அறிவித்த கட்டுப்பாடுகள் எதும் கடைபிடிக்கவில்ல என குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில், கோவையில் ஆயிரக்கணக்கான பட்டறைகளும் ஒரு லட்சம் பேர் இந்த தங்க நகை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் தற்போது மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவால் ஒரு லட்சம் குடும்பத்தினர் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தங்க நகை பட்டறைகளை திறக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், ஆட்சியர் அலுவலகத்தில் சற்று விலக்கு அளிக்குமாறு பலமுறை மனு அளித்தும் பயனுமில்லை என தெரிவித்தனர். தொழில் செய்ய அனுமதி வழங்கக்கோரி 50க்கு மேற்பட்டவர்கள் பெரியகடை சாலையில் திடீர் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

அதேபோல, கோரிக்கைகள் பரிசீலனை செய்யவிட்டால் மாவட்டம் தழுவிய போராட்டம் நடத்த உள்ளதாக பொற்கொல்லர் சங்கத்தினர் தெரிவித்தனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.