கோவையில் இந்து கோவில்களின் மீது தாக்குதல் நடத்திய சம்பவம்: சேலத்தைச் சேர்ந்த கஜேந்திரன் என்பவருக்கு போலீசார் வலைவீச்சு
கோவை: கோவையில் நேற்று மூன்று இந்துக் கோயில்களின் மீது தீ வைத்த சம்பவத்தில் போலீசார் நடத்திய விசாரணையில் குற்றவாளி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள மாகாளியம்மன் கோவில்,
ரயில்நிலையம் முன்பு உள்ள விநாயகர் கோவில்,
நல்லாம்பாளையத்திலுள்ள செல்வ விநாயகர் கோவில் ஆகிய கோவில்களில் நேற்று கோவில் கூரைகள் மீது வைக்கப்பட்டது.
இச்சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், பல இந்து அமைப்பினர் போராட்டங்கள் மற்றும் கண்டனங்களை தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து மாநகர காவல் ஆணையாளர் சுமித் சரண் உத்தரவின்பேரில், குற்றவாளிகளை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
அதேபோல, சிசிடிவி காட்சிகள் மூலம் அடையாளம் காணப்பட்டு தீ வைத்தவர் குறித்த தகவல் சேகரிக்கப்பட்டது. இந்த நிலையில் இச்சம்பவத்தில் ஈடுபட்டவர் கஜேந்திரன் என்பதும் இவர் சேலத்தைச் சேர்ந்தவர் என்பதும் முதற்கட்டமாக தகவல் கிடைத்துள்ளது.
இதை தொடர்ந்து அவர் தலைமறைவாகியுள்ள நிலையில் அவரது குடும்பத்தார் மற்றும் நண்பர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.