கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள டாப்சிலிப்பில் வசிக்கும் மலைவாழ் மக்களின் பெண்கள் ரம்யா, அர்ச்சனா 12ம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்றுள்ளதற்கு வனத்துறையினர் பாராட்டு தெரிவித்தனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட டாப்சிலிப் பகுதியில் காடர், முதுவர், மலசர் என மலைவாழ் மக்கள் ஆயிரத்து மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில், இவர்களின் பெண் குழந்தைகள் நடந்து முடிந்த 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளனர்.
டாப்சிலிப் காலணியைச் சேர்ந்த ரம்யா 311 மதிப்பெண், எருமை பாறை சேர்ந்த அர்ச்சனா 274 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு பத்தாம் வகுப்பு தேர்வில் காடம்பாறை மலைவாழ் மக்கள் இனத்தைச் சேர்ந்த ஸ்ரீதேவி கேரளாவில் தேர்ச்சி பெற்றது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, மலைவாழ் மக்களின் குழந்தைகள் 12ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றதற்கு வனத்துறை சார்பில் ரம்யா, அர்ச்சனாவுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.