நீலகிரி: குன்னூர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் அனைவரையும் கூடலூர், பந்தலூர் பகுதிகளுக்கு திடீரென இடம் மாற்றம் செய்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து பணியினை புறக்கணித்து மருத்துவமனை வளாகத்தில் மருத்துவர்கள் தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தியதால் நோயாளிகள் பாதிக்கப்பட்டனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அரசு மருத்துவமனையில் 11 மருத்துவர்கள் பணியில் உள்ளனர். இவர்களில் ஒருவருக்கு காெராேனா நாேய் தாெற்று ஏற்பட்டு காேவை இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். இருவர் விடுமுறையில் சென்றுள்ள நிலையில், மீதமுள்ள 8 மருத்துவர்களை நேற்று இரவு நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் பந்தலூர் அரசு மருத்துவமனைகளுக்கு இடமாற்றம் செய்து மருத்துவ நிர்வாகம் உத்தரவிட்டது.
இந்த நிலையில், இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து குன்னூர் அரசு லாலி மருத்துவமனையில் மருத்துவர்கள் தரையி்ல் அமர்ந்து பாேராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த உத்தரவை ரத்து செய்யும் வரை போராட்டம் தாெடரும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 50மேற்பட்ட நாேயாளிகள் மற்றும் இதர நாேயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.