திருப்பூரில் இன்று புதிதாக 12 பேருக்கு தொற்று உறுதியான நிலையில் 8 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், ஒருவர் இறப்பு..!

திருப்பூர்: திருப்பூரில் இன்று புதிதாக 12 பேருக்கு தொற்று உறுதியான நிலையில் பாதிப்பின் எண்ணிக்கை 319 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 8 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

திருப்பூர்: திருப்பூரில் இன்று புதிதாக 12 பேருக்கு தொற்று உறுதியான நிலையில் பாதிப்பின் எண்ணிக்கை 319 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 8 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

"மேலும், திருப்பூர் மாவட்டம், தளி பஞ்சாயத்தை சேர்ந்த 61 வயதான பெண் ஒருவர் இன்று சிகிச்சை பலனின்றி கோவை அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். அவர், ஏற்கனவே கொரொனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நபரிடம் தொடர்பில் இருந்துள்ளார் எனவும், ஜூலை 13 ஆம் தேதி அதிக காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட அவர் அதே தினம் உயிரிழந்துள்ளார்", என மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

இன்று பாதிக்கப்பட்ட நபர்களில், அனுப்பர்பாளையம் ஜீவா தெரு பகுதியில் 42 வயதான பெண், 31 வயதான பெண் மற்றும் 56 வயதான பெண் உட்பட நான்கு பேருக்கும், மேலும் காங்கேயம், ராக்கிபாளையம், உடுமலை, பலங்கரை, திருப்பூர் போன்ற பல்வேறு பகுதிகளில் 8 பேருக்கும், என மொத்தம் 12 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளதால் அப்பகுதிகளில் தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

இதோடு, இன்று திருப்பூரில் புதிதாக 201 பேர் என மொத்தம் 2965 பேர் வீட்டுக்கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும், 274 பேர் 14 நாட்கள் தனிமைப்படுத்துதலை நிறைவு செய்துள்ளதாகவும், மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

மேலும், இன்று 525 பேருக்கு கொரோனா மாதிரி பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாகவும், தற்போது 130 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் மாவட்டத்தில் கொரோனா விதிமுறைகளை முறையாக பின்பற்றாமலும், முக கவசம் அணியாமலும் சென்றதாக 634 நபர்களிடமிருந்து ரூ 75,750 அபராதத்தொகை வசூலிக்கப்பட்டுள்ளது, என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Newsletter

வடவள்ளியில் அனுமதியின்றி போஸ்டர் ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 40-ல் உள்ள வடவள்ளி பகுதியில் அனுமதியின்றி விளம்பர போஸ்டர்கள் ஒட்டிய தனியா...

கோவையில் விடுதிக்குள் திருட முயன்ற வடமாநில வாலிபர் கையும் களவுமாக பிடிபட்டார்; போலீசார் விசாரணை

நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் தனியார் ஆண்கள் விடுதியில் பைக் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைத் திருட முயன்றதாகக் கூறப்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய் தயாரிப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூலை 8, 9 தேதிகளில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய்கள் தயாரிப்பு இரண்டு நாள் ப...

அமராவதி-திருமூர்த்தி அணைகளின் இன்றைய (06.07.2026) நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 6ஆம் தேதி 43.44 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 38.2...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையால் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஜூலை 6ஆம்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஜூலை 7 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மேயர் கா. ரங்கநாயகி ரா...