வால்பாறையில் ஓட்டுநர் சங்கத்தின் திறப்பு விழாவை துவக்கி வைத்தார் எம்எல்ஏ கஸ்தூரி வாசு!

கோவை: வால்பாறையில் நடைபெற்ற ஓட்டுநர் சங்கத்தின் திறப்பு விழாவை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு துவக்கி வைத்தார்.

கோவை: வால்பாறையில் நடைபெற்ற ஓட்டுநர் சங்கத்தின் திறப்பு விழாவை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு துவக்கி வைத்தார்.

கோவை மாவட்டம் வால்பாறையில் லாரி, வேன், கார், ஆட்டோ என 500க்கும் மேற்பட்ட வாடகை வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.



இந்நிலையில், இந்த வாகனங்களை இயக்கும் ஓட்டுனர்கள் ஒன்றிணைந்து சங்கம் துவக்கியுள்ளனர், அதன் அலுவலக திறப்பு விழா இன்று சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு தலைமையில் நடைபெற்றது.

தொடர்ந்து சிறப்புரையாற்றிய எம்.எல்.ஏ கஸ்தூரி வாசு, கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஓட்டுனர்களுக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டு உள்ளதாகவும், அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

இந்த விழாவில் சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு, கூட்டுறவு வங்கி தலைவர் வால்பாறை வீ.அமீது, வாசு. பொன்கனேஷ், சலாவுதீன் மற்றும் சங்க நிர்வாகிகள் ஓட்டுனர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

வடவள்ளியில் அனுமதியின்றி போஸ்டர் ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 40-ல் உள்ள வடவள்ளி பகுதியில் அனுமதியின்றி விளம்பர போஸ்டர்கள் ஒட்டிய தனியா...

கோவையில் விடுதிக்குள் திருட முயன்ற வடமாநில வாலிபர் கையும் களவுமாக பிடிபட்டார்; போலீசார் விசாரணை

நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் தனியார் ஆண்கள் விடுதியில் பைக் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைத் திருட முயன்றதாகக் கூறப்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய் தயாரிப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூலை 8, 9 தேதிகளில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய்கள் தயாரிப்பு இரண்டு நாள் ப...

அமராவதி-திருமூர்த்தி அணைகளின் இன்றைய (06.07.2026) நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 6ஆம் தேதி 43.44 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 38.2...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையால் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஜூலை 6ஆம்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஜூலை 7 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மேயர் கா. ரங்கநாயகி ரா...