கோவையில் இறைச்சி கடைகளுக்கு மீண்டும் அனுமதி..! தனி மனித இடைவெளியை கடைபிடிக்காத கடைகளுக்கு சீல் - மாவட்ட ஆட்சியர்

கோவை: தனி மனித இடைவெளியை கடைபிடித்து இறைச்சி விற்பனை செய்ய வேண்டும் எனவும் மீறினால் கடைகள் சீல் வைக்கப்படும் என்று இறைச்சி கடைகளை மீண்டும் திறக்க அனுமதி அளித்து மாவட்ட ஆட்சியர் ராசாமணி உத்தரவு அளித்துள்ளார்.


கோவை: தனி மனித இடைவெளியை கடைபிடித்து இறைச்சி விற்பனை செய்ய வேண்டும் எனவும் மீறினால் கடைகள் சீல் வைக்கப்படும் என்று இறைச்சி கடைகளை மீண்டும் திறக்க அனுமதி அளித்து மாவட்ட ஆட்சியர் ராசாமணி உத்தரவு அளித்துள்ளார்.

ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் தனிமனித இடைவெளியை கடைபிடிக்காமல் இறைச்சி கடைகள் இயங்கியதால், கோவையில் இறைச்சி கடைகள் இயங்க இரண்டு வாரத்திற்கு முன்பு ஆட்சியர் தடை விதித்திருந்தார். கடைகள் இயங்காததால் வியாபாரிகள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நேற்று இறைச்சி கடைகள், வியாபார சங்கத்தினர் ஆட்சியரைக் சந்தித்து கோரிக்கை வைத்திருந்தனர்.

மேலும், தனி மனித இடைவெளியை கடைபிடித்து விற்பனை செய்கிறோம் என்று உத்தரவாதம் அளித்தால் அனுமதி கொடுக்கப்படும் என்று ஆட்சியர் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, வியாபாரிகள் உத்தரவாதம் அளித்ததன் பேரில் தற்போது கடைகள் இயங்க அனுமதி அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும், மீறினால் கடைகள் சீல் வைக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

இன்றைய நிலவரப்படி, பிராய்லர் கோழி ஒரு கிலோ ரூ 240க்கும், பண்ணை நாட்டுக்கோழி ஒரு கிலோ 350க்கும், நாட்டுக்கோழி 650, ஆட்டிறைச்சி கிலோ 900 ரூபாய்க்கும், மாட்டு இறைச்சி கிலோ ரூ.300க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

மேலும், காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே கறிக்கடை விற்பனை செய்ய வேண்டும் என அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...