கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆட்சியர், காவல் துறை அதிகாரிகளுடன் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி இன்று ஆலோசனை நடத்தினார். கொரோனா தொற்று ஏற்பட்ட 134 பேரில் 88 நபர்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர், என தெரிவித்தார். மேலும், தினமும் 21600 பேருக்கு 15 அம்மா உணவகங்கள் மூலம் உணவு வழங்கப்பட்டு வருகின்றது.
கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆட்சியர், காவல் துறை அதிகாரிகளுடன் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி இன்று ஆலோசனை நடத்தினார்.
ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது, கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை தீவரமாக நடைபெற்று வருகின்றது எனவும், கொரோனா தொற்று ஏற்பட்ட 134 பேரில் 88 நபர்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர், என தெரிவித்தார்.
மேலும், தினமும் 21600 பேருக்கு 15 அம்மா உணவகங்கள் மூலம் உணவு வழங்கப்பட்டு வருகின்றது. யாருக்கும் உணவில்லை என்ற சூழலை கோவை மாவட்டத்தில் உருவாக்கி இருக்கின்றோம், என தெரிவித்தார்.
மேலும், மக்கள் ஊரடங்கை முழுமையாக செயல்படுத்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்ட அமைச்சர், பொதுமக்கள் 7 நாட்களுக்கு வேண்டிய பொருட்களை ஒரே நாளில் வாங்கிக்கொள்ள வேண்டும், என அறிவுறுத்தினார்.
ஊடகவியலாளர்கள் இடைவெளியை கடைபிடித்து கவனத்துடன் இருக்க வேண்டும், செய்திகளை முடிந்தளவு போன்மூலமாக பெற்று கொடுக்க வேண்டும் என குறிப்பிட்ட அமைச்சர்
இறைச்சி கடைகள் திறக்க அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வந்துள்ள நிலையில், சமூக இடைவெளியை பின்பற்றுவது குறித்து இறைச்சி கடைக்காரர்கள் உறுதியளித்தால் இறைச்சி கடைகள் திறப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என தெரிவித்தார்.
டெல்லி மாநாட்டுற்கு சென்ற குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த ஒருவர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று குணமான நிலையில், சர்க்கரை வியாதி காரணமாக அவர் இறந்து விட்டார் எனவும், உடலை கோவை கொண்டு வர விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை குறித்து பரீசிலிக்கப்படும் என தெரிவித்தார்.
எச்.ஐ.வி நோயாளிகள் மருத்துகள் வாங்கி திரும்பும் போது அபராதம் விதிக்கப்படுவதாக எழுந்த புகார் குறித்து விசாரிக்கபட்டு, தடையின்றி மாத்திரை வாங்கி செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உறுதியளித்தார்.
ரேபிட் கிட் சோதனை நிறுத்தபட்டதால் சோதனையில் சுணக்கம் ஏற்படவில்லை, பி்சி்ஆர் சோதனை அரசு மருத்துவமனை, இ.எஸ்.ஐ மருத்துவமனை ஆகிய இரு இடங்களிலும் நடைபெற்று வருகின்றது. மக்களுடன் தொடர்பில் உள்ள அதிகாரிகள், பத்திரிகையாளர்கள், காவல்துறையினர் ஆகியோருக்கு கொரோனா பரிசோதனை விரைவில் நடத்தப்படும், என தெரிவித்தார்.