கோவை: கோவையில் முதல்வர் நிவாரண நிதிக்கு லட்சமி மெஷின் ஒர்க்ஸ் சார்பில் ரூ.2 கோடிக்கான காசோலை அமைச்சர் எஸ். பி.வேலுமணியிடம் வழங்கப்பட்டது.
கோவை: கோவையில் முதல்வர் நிவாரண நிதிக்கு லட்சமி மெஷின் ஒர்க்ஸ் சார்பில் ரூ.2 கோடிக்கான காசோலை அமைச்சர் எஸ். பி.வேலுமணியிடம் வழங்கப்பட்டது.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவிலும் அதிகரித்து வருகிறது. இதனிடையே, கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு நிதியுதவி அளிக்குமாறு மத்திய மாநில அரசுகள் கேட்டுக் கொண்டதன் பேரில் தொழில் அதிபர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினர் நிதியுதவிகளை அளித்து வருகின்றனர்.
இந்நிலையில், லட்சமி மெஷின் ஒர்க்ஸ் சார்பில் அதன் தலைவரும் நிர்வாக இயக்குநருமான சஞ்சய் ஜெயவர்தனவேலு இன்று முதல்வர் நிவாரண நிதியாக ரூ.2 கோடிக்கான காசோலையை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி முன்னிலையில் வழங்கினார்.
இந்த நிகழ்வின் போது, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி, கோவை வடக்கு மாவட்ட எம்எல்ஏ பி.ஆர் ஜ அருண் குமார் ஆகியோர் உடனிருந்தனர்.