கோவையில் நடைபெற்ற வாகன சோதனையின் போது மருத்துவ ஊழியர்கள் என தெரிந்தும் காக்க வைத்த போலீசார்!

கோவை: கோவையில் வாகன சோதனையின் போது மருத்துவ ஊழியர்கள் என தெரிந்தும் பந்தயசாலை காவல் நிலைய உதவி ஆய்வாளர் பணியாளர்களை மொபைல் போனில் படமெடுத்தும், நீண்ட நேரம் வாகனத்தை அனுமதிக்காமல் இருந்தது அதிருப்தியை ஏற்படுத்தியது.


கோவை: கோவையில் வாகன சோதனையின் போது மருத்துவ ஊழியர்கள் என தெரிந்தும் பந்தயசாலை காவல் நிலைய உதவி ஆய்வாளர் பணியாளர்களை மொபைல் போனில் படமெடுத்தும், நீண்ட நேரம் வாகனத்தை அனுமதிக்காமல் இருந்தது அதிருப்தியை ஏற்படுத்தியது.

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மிக அவசர தேவைக்கு மட்டுமே வெளியே வரவேண்டும் என்றும் காவல்துறை சார்பாகவும் சுகாதாரத்துறை சார்பாகவும் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் காவல் துறை, மருத்துவ துறை, சுகாதாரம் மற்றும் பத்திரிக்கை துறை என சேவை துறைகளை சார்ந்தவர்கள் தினந்தோறும் வெளியே வந்து செல்வது மிக அவசியமாக உள்ளது.

இந்த நிலையில், இன்று கோவை லட்சுமி மில் பகுதியில் வாகன சோதனையின் போது தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வரும் ஊழியர்கள் வாகனத்தை அனுமதிக்காமல் காவல் துறையினர் கால தாமதம் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் அவர்கள் மருத்துவ பணியாளர்கள் என அடையாள அட்டையை காண்பித்தபோதும் அவர்களை மொபைலில் படம் எடுத்துள்ளனர். 

மேலும், அவர்களின் மொபைலை வாங்கிக்கொண்டு காவல் நிலையத்துக்கு வருமாறும் கூறியுள்ளனர். பின்னர் பணியாளர்கள் அவர்களின் மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்த நிலையில், அரைமணி நேர வாக்குவாதத்திற்கு பிறகு அங்கிருந்து சென்றனர்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...