கோவை: கோவை மாநகர காவல் எல்லையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட தேதியில் இருந்து கடந்த 20ம் தேதி வரை ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தை இயக்கியதாக மொத்தம் 35,605 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை: கோவை மாநகர காவல் எல்லையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட தேதியில் இருந்து கடந்த 20ம் தேதி வரை ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தை இயக்கியதாக மொத்தம் 35,605 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பொதுமக்கள் ஒன்றுகூட தடை விதிக்கப்பட்டுள்ள நிலையிலும் ஆங்காங்கே தனிமனித இடைவெளியை பின்பற்றாமல் வழக்கம்போல நடமாடி வருகின்றனர். அதேபோல தடையை மீறி அனாவசியமாக சாலைகளிலும் பயணிக்கின்றனர்.
இந்த நிலையில், கோவை மாநகர காவல் துறையினர் தமிழக அரசின் உத்தரவின்படி சாலையில் அனாவசியமாக பயணிப்பவர்கள் மீது வழக்கு பதிவு செய்து வருகின்றனர்.
அதேபோல, மாநகர போக்குவரத்து போலீசார் ஹெல்மெட் அணியாமல் பயணிப்பவர்கள் மீதும் தொடர்ச்சியாக வழக்கு பதிவு செய்கின்றனர்.
அதன்படி, கோவை மாநகரில் கடந்த மார்ச் மாதம் 24ம் தேதியில் இருந்து இந்த மாதம் 20ம் தேதி வரை ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தை இயக்கியதாக கிழக்கு போக்குவரத்து எல்லையில் 15,922 வழக்குகளும், மேற்கு போக்குவரத்து எல்லையில் 19,683 வழக்குகளும் என மொத்தம் 35,605 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல, காவல் ஆணையாளர் சுமித் சரண் உத்தரவின் பேரில்
துணை ஆணையாளர் முத்தரசு மேற்பார்வையில் மாநகரப் போக்குவரத்து போலீசார் விதியை மீறும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க தீவிரம் காட்டி வருகின்றனர்.