வால்பாறையில் கொரோனா தொற்று பரவலால் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் பொள்ளாச்சி சார் ஆட்சியர் நேரில் ஆய்வு

கோவை: வால்பாறையில் கொரோனா தொற்று பரவலால் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியை பொள்ளாச்சி சார் ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கோவை: வால்பாறையில் கொரோனா தொற்று பரவலால் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியை பொள்ளாச்சி சார் ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

கோவை மாவட்டம் வால்பாறையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பெண் தங்கியிருந்த காந்தி நகர் பகுதி தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு இருந்தது. மேலும் கடந்த இரண்டு நாட்களாக வால்பாறை நகரம் முழுவதும் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. 



இந்த நிலையில், காந்திநகர் பகுதியைத் தவிர மற்ற பகுதிகள் வழக்கம்போல் கடைகள் திறக்கப்பட்டிருந்தன. பொள்ளாச்சி சார் ஆட்சியர் வைத்தியநாதன் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியான காந்தி நகர் பகுதியை பார்வையிட்டார்.



இதனைத்தொடர்ந்து வால்பாறை நகராட்சி ஆணையர் டாக்டர் பவுன்ராஜ், வட்டாட்சியர் ராஜன், டிஎஸ்பி விவேகானந்தன், வால்பாறை வட்டார வள மைய மருத்துவர் பாபு கணேஷ், கூட்டுறவு வங்கி தலைவர் வால்பாறை அமீது, நகர செயலாளர் மயில் கணேசன் வாசு ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். 

ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய சார் ஆட்சியர், வால்பாறையில் கடைகள் திறக்கும் நேரம் ஒரு மணி நேரம் குறைக்கப்பட்டு காலை ஆறு மணியிலிருந்து மதியம் 12 மணி வரை என்று அறிவித்தார். 

மேலும், வால்பாறையில் நான்கு பகுதியிலும் தொடர்ந்து சோதனை சாவடிகள் செயல்படும் எனவும் பொள்ளாச்சியிலிருந்து சுகாதாரத்துறையினர் தனிமை படுத்தப்பட்ட பகுதியை பார்வையிட்டு வீடு வீடாக ஆய்வு செய்வார்கள் என்று தெரிவித்தார்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...