வால்பாறை பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் தீவிரம்!

கோவை: வால்பாறை பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து, கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கோவை: வால்பாறை பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து, கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

கோவை மாவட்டம் வால்பாறையைச் சேர்ந்த ஒரு பெண் பிரசவத்திற்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். கடந்த சில தினங்களுக்கு முன் அவர் பிரசவத்திற்கு பின் பொள்ளாச்சியில் இருந்து வால்பாறை திரும்பியுள்ளார் வால்பாறை புது மார்க்கெட் காந்திநகர் பகுதியில் அவர் தங்கியிருந்தார். அவருக்கு கொரோனா தொற்றுநோய் உறுதி செய்யப்பட்டது. 

இதனைத்தொடர்ந்து, அவர் கோவையில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதன் காரணமாக. அவர் தங்கியிருந்த காந்தி நகர், வால்பாறை மார்க்கெட் பகுதி முழுவதும் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு சாலைகள் அடைக்கப்பட்டது. 



வால்பாறை நகர் பகுதியில் உள்ள அனைத்து கடைகள் வணிக நிறுவனங்கள் முற்றிலும் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து வால்பாறை நகராட்சி ஆணையர் டாக்டர் பவுன்ராஜ் உத்தரவின் பேரில் வால்பாறை மார்க்கெட் பகுதி நகை கடை வீதி, கக்கன் காலனி ஆகிய பகுதிகளில் நகராட்சி கொரோனா தடுப்பு பணியாளர்கள் கிருமி நாசினி மருந்து தெளிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 

மேலும், வால்பாறை பகுதி மக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் எனவும் மீறி நடமாடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வாகனத்தில் ஒலிபெருக்கி மூலம் நகராட்சி சார்பில் எச்சரிக்கப்பட்டு வருகிறது.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...